»   »  ஏப்ரலில் வெளியாகிறது தனுஷின் 'அம்மா கணக்கு'

ஏப்ரலில் வெளியாகிறது தனுஷின் 'அம்மா கணக்கு'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது தயாரிப்பில் உருவாகி இருக்கும் அம்மா கணக்கு திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார்.

ரேவதி, அமலாபால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அம்மா கணக்கு. இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற பெயரில் வெளியான இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய தனுஷ் அதனை தனது பேனரிலேயே தயாரித்திருக்கிறார்.

இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் தான் தமிழிலும் இயக்கியுள்ளார். கடந்த மாதம் 6 ம் தேதி தொடங்கிய அம்மா கணக்கு படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23ல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, வருகின்ற ஏப்ரலில் வெளியிடுவதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் "வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் அம்மா கணக்கு படப்பிடிப்பு முடிவடைந்தது. ஏப்ரல் மாதம் படம் வெளியாகும்.

படத்தை திட்டமிட்டு முடித்துக் கொடுத்த அஸ்வினி ஐயருக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார். அம்மா-மகள் பாசத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியிருக்கும் அம்மா கணக்கு, படப்பிடிப்பை இயக்குநர் வெறும் 48 நாட்களில் முடித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush Tweeted "It's a wrap for Wunderbar films "Amma kanakku".April release.Thank u Ashwinyiyer for superb planning and execution".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil