twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது இல்ல, இதுதான்.. சீன மொழியில் தனுஷின் சூப்பர் ஹிட் படம்.. தயாரிப்பாளர் தாணு விளக்கம்!

    By
    |

    சென்னை: தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படம் சீன மொழியில் ரீமேக் செய்ய போவதாக வந்த தகவலை தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.

    கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம், அசுரன். தனுஷ் வயதான கேரக்டரிலும் இளம் வயது தோற்றத்திலும் நடிப்பில் மிரட்டியிருந்தார்.

    அவர் மனைவியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இது அவருக்கு தமிழில் முதல் படம்.

    சுறாவுடன் நீந்தியா கத்ரீனா கைஃப்.. மெர்சலான வீடியோ.. வாய் பிளந்த ரசிகர்கள் !சுறாவுடன் நீந்தியா கத்ரீனா கைஃப்.. மெர்சலான வீடியோ.. வாய் பிளந்த ரசிகர்கள் !

    மிகப்பெரிய வெற்றி

    மிகப்பெரிய வெற்றி

    டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், வெங்கடேஷ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது. அண்ணனை கொன்றவனை தம்பி பழிதீர்க்கும் கதை. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

    தெலுங்கு கன்னடம்

    தெலுங்கு கன்னடம்

    நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக, 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம், இதுதான். இந்தப் படம், ரூ.150 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெகா ஹிட்டான தமிழ் படமும் இதுதான். 100 நாட்களை கடந்து ஓடிய இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

    பிரியாமணி

    பிரியாமணி

    தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இதில் மஞ்சுவாரியர் கேரக்டரில், நடிகை பிரியாமணி நடிக்கிறார். தயாரிப்பாளர் தாணுவுடன் இணைந்து சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படம் சீன மொழியில் ரீமேக் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாயின. சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்று, அசுரன் தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

    உண்மையில்லை

    உண்மையில்லை

    இந்நிலையில் இதை மறுத்துள்ளார் அசுரன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. 'அசுரன் சீன மொழியில் ரீமேக் செய்ய இருப்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை. இது தொடர்பாக யாரும் எங்களை அணுகவில்லை. ஆனால் இந்தப் படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிட உள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Producer Dhanu clarifies, 'Dhanush's Asuran Chinese remake news is false, we are going to dub the movie in chinese language'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X