ஷூட்டிங் முடியும் முன்பே 120 கோடி பிசினஸ்… தனுஷின் கேப்டன் மில்லருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் பீரியட் படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் ஷூட்டிங் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரிலீசுக்கு முன்னரே வசூலில் கெத்து காட்டியுள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லர்
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அடுத்தடுத்து வெளியான தனுஷின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த அருண் மாதேஸ்வரன் 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் கேப்டன் மில்லர், பீரியட் படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அனல் பறக்கும் பிசினஸ்
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களுக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்ததால், கேப்டன் மில்லரும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முதன்முறையாக தனுஷ் - அருண் மாதேஸ்வரன் என புதிய கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், மேக்கிங்கில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்திற்கான ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட்ஸ் பிசினஸ் களைக்கட்டத் தொடங்கியுள்ளதாம்.

120 கோடி வசூல்
முதற்கட்ட படப்பிடிப்பை மட்டுமே முடித்துள்ள கேப்டன் மில்லர் படக்குழு, விரைவில் மொத்த படத்தின் ஷூட்டிங்கையும் நிறைவு செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படம் எப்போது ரிலீஸ் என்ற தகவலும் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இந்நிலையில், கேப்டன் மில்லர் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை இரண்டும் சேர்த்து 120 கோடிக்கு பிசினஸ் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஷூட்டிங்கே முடியாத நிலையில், 120 கோடிக்கு பிசினஸ் நடந்துள்ளது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.

மல்டி ஸ்டார்ஸ்
கேப்டன் மில்லர் படத்தின் 120 கோடி ரூபாய் பிசினஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கியமான கேரக்டர்களில் சந்தீப் கிஷன், குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தனுஷுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றன. இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











