செப்டம்பரில் தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங்: யாரும் எதிர்பார்க்காத அப்டேட் கொடுத்த இயக்குநர்
சென்னை: திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Recommended Video
விரைவில் தனுஷின் நானே வருவேன் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிஸியான தனுஷ்
அசுரன் வெற்றிக்குப் பின்னர் ஜகமே தந்திரம், மாறன், அத்ரங்கி ரே, தி கிரே மேன் என அடுத்தடுத்து தனுஷின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனால் உற்சாகம் இல்லாமல் இருந்த தனுஷ், திருச்சிற்றம்பலம் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டால் ஹேப்பி மோடில் காணப்படுகிறார். மேலும், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ள ‘நானே வருவேன்' படமும் விரைவில் வெளியாகவுள்ளதால், இன்னும் உற்சாகமாக இருக்கிறார்.

நானே வருவேன் ஆடியோ ரிலீஸ்
'நானே வருவேன்' படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி, தனுஷ் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று கவ்பாய் தோற்றத்தில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தனுஷுடன் பிரபு, யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘நானே வருவேன்' படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இந்நிலையில், செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள நானே வருவேன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்காக தனுஷ் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கேப்டன் மில்லர் ஷூட்டிங்
நானே வருவேன் ஆடியோ ரிலீஸ் முடிந்ததும், தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ராக்கி, சாணிக்காயிதம் என ராவான ஆக்சன் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லர் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் குறித்து அபிஸியல் அப்டேட் ஜூலை மாதம் வெளியானது. மிக வித்தியாசமாக உருவாகியிருந்த கேப்டன் மில்லர் மோஷன் போஸ்டர், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

ஒரே ஷெட்யூலில் ஷூட்டிங்
மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில், தனுஷுடன் பிரியங்கா மோகன் நடிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 1930களின் காலக்கட்டத்தின் கதைக்களத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் ஷூட்டிங், 120 நாட்களில் தொடர்ந்து ஒரே ஷெட்யூலில் முடிக்க அருண் மாதேஸ்வரன் திட்டமிட்டுள்ளாராம். மேலும், அருண் மாதேஸ்வரனின் ஃபேவரைட் ஸ்பாட்டான ராமேஸ்வரத்தில் தான் கேப்டன் மில்லர் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. புதுமையான ஜானரில் தனுஷின் கேரியரில் தரமான படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











