»   »  மாமனார் ரஜினியை முந்திய மருமகன் தனுஷ்!

மாமனார் ரஜினியை முந்திய மருமகன் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ட்விட்டர் என்பது பிரபலங்களின், குறிப்பாக சினிமா பிரபலங்களின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இதில் முதலில் அடி அந்தந்த சினிமா பிரபலங்களின் பிஆர்ஓக்கள்தான். அவர்களின் வேலையைத்தான் ட்விட்டர் செய்து விடுகிறதே...

முன்னணி நடிகர்களின் ட்விட்டர் பக்கங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அதில் தமிழில் முன்னணியிலிருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Dhanush's followers count reach 4 millions

ஆனால் அவர் ட்விட்டரில் எப்போதாவது ஒரு முறைதான் பதிவுகள் இடுகிறார். ஜஸ்ட் 11 பதிவுகளைப் போட்ட போதே அவரது ஃபாலோயர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியிருந்தது.

இப்போத அவரது ஃபாலோயர்கள் எண்ணிக்கையை முந்தியிருக்கிறார் மருமகன் தனுஷ்.

தனுஷின் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

விஜய் 8 லட்சம், சூர்யா 15 லட்சம், சிம்பு 16 லட்சம், சிவகார்த்திகேயன் 26 லட்சம், கமல்ஹாசன் 4 லட்சம் என்ற எண்ணிக்கையில் ஃபாலோயர்களை வைத்துள்ளனர்.

English summary
Dhanush's follower's count has reached 4 millions in Twitter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil