Don't Miss!
- Automobiles
வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த மாருதி சுஸுகி!! கார்களின் விலைகள் ரூ.22,500 வரையில் அதிகரிப்பு!
- News
உலகம் முழுவதும் தீயாக பரவும் கொரோனா - 14 கோடி பேர் பாதிப்பு - 30 லட்சம் பேர் மரணம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்று தொடங்குகிறது தனுஷின் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்.. குஷி மோடில் ரசிகர்கள்!
சென்னை: தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர், என பல முகங்களை கொண்டுள்ளார்.

ஹாலிவுட்டில் என்ட்ரி
தமிழ் படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து வரும் தனுஷ் ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் தனுஷ்.

மார்க் கிரேனியின் நாவல்
இந்நிலையில் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக சமீபத்தில் தனுஷ் அமெரிக்கா சென்றார். இந்த படம் மார்க் கிரேனி என்பவர் எழுதிய ‘தி கிரே மேன்' என்கிற நாவலை அடிப்படையாக கொண்டது.

கொலை கூட்ட தலைவன்
இப்படத்தை ஆன்டனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். ஹாலிவுட் நட்சத்திரங்கள் ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் உடன் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்கின்றனர். இதில் தனுஷ் ரயான் காஸ்லிங்கின் கேரக்டரை கொலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக நடிக்கிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸில்..
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. இதுவரை ப்ரி புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதற்கட்டமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.