»   »  தனுஷின் ஹாலிவுட் பட டீசர் வெளியானது... இதுதான் கதையா?

தனுஷின் ஹாலிவுட் பட டீசர் வெளியானது... இதுதான் கதையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள ஹாலிவுட் படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்'. கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம், ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிவருகிறது.

இப்படத்தில் அஜாதசத்ரு லாவாஷ் படேல் எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். அஜாதசத்ரு ஒரு மேஜிக் மேன் கேரக்டராம். தெருவில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தும் கலைஞராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.

Dhanush's hollywood film teaser

தமிழ், இந்தியை தொடர்ந்து 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதிக்கிறார் நடிகர் தனுஷ். பிரெஞ்ச் நாவலைத் தழுவி இப்படம் உருவாகி உள்ளது.

மும்பையில் இருந்து பாரீஸ் செல்லும் தனுஷின் பயண அனுபவங்கள் தான் படத்தின் கதை என டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.

தனுஷுக்கு இப்போது ஏறுமுகம். இயக்குநர், தயாரிப்பாளர் என தொட்டதெல்லாம் துலங்கும் நிலையில், ஹாலிவுட் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இருக்கிறார். நீண்டநாள் தயாரிப்பிலிருந்த இந்தப் படம் ஒருவழியாக முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடக்கிறது.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்தியாவிலும் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Dhanush's hollywood debut 'The extraodinary journey of fakir' teaser poster released. Dhanush acts as a magician in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil