காதலர் தினத்துக்கு முன் வெளியாகிறதா, தனுஷின் 'ஜகமே தந்திரம்..?' படக்குழு தகவல்!

By

சென்னை: தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அசுரன் ஹிட்டுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார், தனுஷ்.

இதில் அவர் ஜோடியாக, பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

ஜேம்ஸ் காஸ்மோ

ஜேம்ஸ் காஸ்மோ

பிரேவ் ஹார்ட், தி கிரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா, கேம்ஸ் ஆப் த்ரோன் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ இதில் வில்லனாக நடித்திருக்கிறார். அவர் மற்றும் கலையரசன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், வடிவுக்கரசி, தேவன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

லண்டனில் ஷூட்டிங்

லண்டனில் ஷூட்டிங்

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. அங்கு முடிந்து இந்தியாவில் தொடர்ந்தது. நான் நடித்ததிலேயே வேகமாக முடிவடைந்த படம் இதுதான் என்று கூறியிருந்தார் தனுஷ்.

ரகிட ரகிட ரகிட

ரகிட ரகிட ரகிட

தனுஷின் 40 வது படமான இதன் ரகிட ரகிட ரகிட பாடல் கடந்த ஜூலை மாதம் வெளியாகி வைரலானது. அடுத்து, புஜ்ஜி என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இதை தயாரிப்பாளர் சசிகாந்த் மறுத்திருந்தார்.

Recommended Video

Dhanushஐ மீண்டும் சீண்டும் Simbu | Master | KGF 2 | Filmibeat Tamil
பிப்ரவரி ரிலீஸ்

பிப்ரவரி ரிலீஸ்

பின்னர் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. மாஸ்டர் படம் வெளிவருவதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், காதலர் தினத்திற்கு முன்பாகவே பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X