ஜகமே தந்திரம் மேக்கிங் வீடியோ… சுவாரசியமான தகவலை பகிர்ந்தார் கார்த்திக் சுப்புராஜ் !
சென்னை : ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக் தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் படப்பிடிப்புதளத்தில் நிகழ்ந்த சுவாரசியமான தகவல்களை கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த வீடியோ தனுஷ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜகமேதந்திரம்
கர்ணன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி உள்ள திரைப்படம் ஜகமேதந்திரம். இந்த திரைப்படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என்ற வசனம் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்பை மேலும் அதிகரித்துள்ளது.

பாடல்கள் ஹிட்
Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்த இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

மேக்கிங் வீடியோ
மேலும், தனுஷ் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் வந்தாலும் அதிலும் நான் சுருளியாக நடிப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று கார்த்திக் சுப்புராஜ் ஒரு காமன் டிபியை வெளியிட்டு இருந்தார். அதேபோல ஜகமே தந்திரம் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும், படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சுவாரசியமான தகவல்களையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்
17 மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்தில், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட்நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் , அஸ்வந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சற்று நேரத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











