Just In
- 26 min ago
வொர்க் மோடாம்.. விக்ரமின் கோப்ரா படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ!
- 35 min ago
கடவுளே நீ தான் காப்பாத்தணும்.. கீர்த்தி சுரேஷும், செல்வரகாவனும் அப்படி என்ன வேண்டிக்கிறாங்க!
- 1 hr ago
நான் ஒரு ஜிம் பாடி.. வெளிச்சம் போட்டுக் காட்டிய ஷிவானி.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்
- 1 hr ago
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிம் கர்தாஷியன்.. ஆனால் அதில் ஒரு செம ட்விஸ்ட் இருக்கு!
Don't Miss!
- News
கோவிலில் ஆடு பலியிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்... இது எங்க தெரியுமா!
- Finance
செக் இன் லக்கேஜ் இல்லையெனில் விமான கட்டணத்தில் தள்ளுபடி.. புதிய அறிவிப்பு..!
- Sports
பல் பிடுங்கிய பாம்பு.. இந்தியாவின் டெஸ்ட் வெற்றியால் சிக்கலில் ஐசிசி.. எல்லா பக்கமும் வசமான செக்!
- Lifestyle
சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...
- Automobiles
அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யாருய்யா அந்த சுருளி.. மிரள விடும் தனுஷ்.. வெளியானது ஜகமே தந்திரம் டீசர்.. ஓடிடியில் தான் ரிலீஸ்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் டீசர் வெளியாகியுள்ள நிலையில் படம் ஓடிடி தளத்தில்தான் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லாக்டவுன் நேரத்தில்..
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. லாக்டவுனுக்கு முன்பே இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இதனால் லாக்டவுன் நேரத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியானது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்
ஆனால் தனுஷ் ரசிகர்கள் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
விரைவில் வருகிறார் சுருளி
இதுதொடர்பான அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தளம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் போடு தகிட தகிட.. ரகிட ரகிட.. விரைவில் நெட்பிளிக்ஸுக்கு வருகிறார் சுருளி என பதிவிட்டுள்ளது. இதன் மூலம் ஜகமே தந்திரம் வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.

ஜகமே தந்திரம் டீசர்
இதனிடையே ஜகமே தந்திரம் படத்தின் டீசரை படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யார் அந்த சுருளி என்ற வசனத்துடன் தொடங்குகிறது டீசர்.

பொத்திட்டு போடா..
அதற்கு சுருளி ஒரு ஆபத்தான நொட்டோரியஸ் மற்றும் கேங்ஸ்டர் என்று பதில் குரலும் ஒலிக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இப்படத்தில் மிரட்டலாக வருகிறார் தனுஷ். இறுதியாக சரிடா.. பொத்திட்டு போடா என்று கூறுகிறார் தனுஷ்.

திக்குமுக்காடும் ரசிகர்கள்
ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தனுஷின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து கோரிக்கை விடுத்த நிலையில் இன்று ஓடிடியில் ரிலீஸ் அறிவிப்பும், படத்தின் டீசரும் வெளியாகியிருப்பது ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.

55 கோடி ரூபாய்க்கு..
#JagameThandhiram என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டாகி வருகிறது. இதனிடையே ஜகமே தந்திரம் திரைப்படம் கிட்டத்தட்ட 55 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸில் விற்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.