தரமான சம்பவம் லோடிங்.. ’அசுரன்’ தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மற்றும் சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நெட்பிளிக்ஸில் வரும் ஜூன் 18ம் தேதி வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீசாகவில்லை. தியேட்டர் ரிலீசா அல்லது ஒடிடி ரிலீசா என விவாதங்கள் கிளம்பிய நிலையில், கடைசியாக வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் இந்த படம் வெளியாகிறது.

அடுத்த சம்பவம்

அடுத்த சம்பவம்

அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் நடிகர் தனுஷின் வெறித்தனமான நடிப்பை கண்டு வியந்த ரசிகர்கள் அடுத்த சம்பவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இரண்டு ஹீரோயின்கள்

இரண்டு ஹீரோயின்கள்

இந்த படத்தில் தனுஷுக்கு இரண்டு கதாநாயகிகள். மதுரையில் பரோட்டா மாஸ்டர் பிளஸ் டானாக இருக்கும் சுருளிக்கு சஞ்சனா நடராஜன் ஜோடியாகவும், லண்டனில் இண்டர்நேஷனல் டானாக மாறும் தனுஷுக்கு ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் ஜோடியாக நடித்துள்ளனர்.

டிரைலர் எப்போ

டிரைலர் எப்போ

வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள கேங்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் நேத்து பாடல் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை எகிற விட்டது. இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படத்தின் டிரைலர் வரும் ஜூன் 1ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X