»   »  தீபாவளி ரேஸ்: கமல், கார்த்தியுடன் மோதும் தனுஷ்

தீபாவளி ரேஸ்: கமல், கார்த்தியுடன் மோதும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடித்துள்ள கொடி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொடி. தனுஷ், த்ரிஷா முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர்.

Dhanush's Kodi to fly high for Diwali

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் அரசியல் ப்ளஸ் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

தனுஷின் கொடி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. அதாவது வரும் அக்டோபர் மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே தீபாவளி ரேஸில் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2, கார்த்தியின் காஷ்மோரா, விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த ரேஸில் கொடியும் சேர்ந்துள்ளது.

தீபாவளிக்கு தனுஷ் படம் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

English summary
The latest movie that joined Diwali race is Dhanush' Kodi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil