»   »  இணையத்தில் 10 கோடி பார்வைகளைத் தாண்டியது 'வொய் திஸ் கொலவெறி'

இணையத்தில் 10 கோடி பார்வைகளைத் தாண்டியது 'வொய் திஸ் கொலவெறி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதளத்தில் சுமார் 10 கோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது 3 படத்தில் இடம்பெற்ற 'வொய் திஸ் கொலவெறி டி' பாடல்.

தனுஷ், சுருதிஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிவந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இதே போன்று இன்றைக்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் அனிருத்தின் இசைப்பயணமும் இந்தப் படத்தில் தான் ஆரம்பமாகியது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற வொய் திஸ் கொலவெறி என்ற பாடலை படத்தின் நாயகன் தனுஷ் எழுதி அவரே பாடியிருந்தார். இளைஞர்களின் மனங்கவர்ந்த இந்தப் பாடல் தற்போது எந்தவொரு இந்தியப் படமும் செய்யாத சாதனையை செய்திருக்கிறது.

ஆமாம் இணையதளத்தில் சுமார் 10 கோடிப் பேருக்கும் அதிகமானோர் பார்க்கப்பட்ட பாடலாக இப்பாடல் மாறியிருக்கிறது. இப்பாடல் வெளிவந்து சரியாக 4(November, 2011) வருடங்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

இணையதளத்தில் 10 கோடி பார்வைகளைத் தாண்டிய முதல் இந்திய பாடல் 'வொய் திஸ் கொலைவெறி' என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Dhanush's 'Kolaveri di' Song Now Crosses 100 Million Views on You Tube. A song was released on YouTube on November 16, 2011.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil