மாறனை விடாமல் துரத்தும் சர்ச்சைகள்...இப்போ என்னன்னு தெரியுமா ?

சென்னை : தனுஷ் நடித்த மாறன் படம் அடுத்தடுத்து விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கிளம்பி உள்ள பிரச்சனையால் படத்திற்கு தடை ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாறன் படம் மார்ச் 11 ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், அமீர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் நெகடிவ் விமர்சனங்களையே பெற்றது.

முதல் நாள் கூட முழு படத்தையும் யாரும் பார்க்கவில்லை என சொல்லும் அளவிற்கு படுதோல்வி அடைந்துள்ளது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் இந்த படம் தோல்வியே அடைந்துள்ளது. ஜகமே தந்திரம், அத்ரங்கி ரே என வரிசையாக தனுஷ் படங்கள் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை தந்துள்ளது.

மாறனுக்கு அடுத்தடுத்து சிக்கல்

மாறனுக்கு அடுத்தடுத்து சிக்கல்

மாறன் படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பேசப்பட்ட வசனங்கள் சர்ச்சையாக்கப்பட்டன. முன்னுக்கு பின் முரணான வசனங்கள் லாஜிக் இல்லாத காட்சிகளால் டைரக்டர் கார்த்திக் நரேனை நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து மாறன் படத்தின் டைட்டில் கார்டு, விஜய் நடித்த சர்கார் படத்தின் டை்டில் கார்டை போலவே இருப்பதாக ஒரு பிரச்சனை கிளம்பி உள்ளது.

இதை கூட கவனிக்கலியா

இதை கூட கவனிக்கலியா

இந்நிலையில் தனுஷ், சமுத்திரக்கனி, அமீர் என பலரும் புகைப்பிடிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த இடத்திலும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை. சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும் என்பது அரசு விதிமுறைகளில் ஒன்று. ஆனால் எச்சரிக்கை வாசகங்கள் இல்லாமல் புகைப்பிடிக்கும் தனுஷ் படக்காட்சி,நடவடிக்கை எடுக்காத சுகாதாரத்துறையை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்ததற்காக தனுஷிற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு பிறகு புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் இருந்த தனுஷ் இதில் மீண்டும் தனுஷ் புகைப்பிடித்தல் காட்சிகளில் நடித்திருக்கிறார். காட்சியில் எந்த விதமான எச்சரிக்கை வாசகங்களும் இல்லாமல் உள்ளது.
இது சுகாதார துறையை எச்சரிக்கையை மீறுவதுபோல் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சர்ச்சையை சந்தித்த படங்கள்

சர்ச்சையை சந்தித்த படங்கள்

இதேபோல் விஜய்யின் சர்கார் ஒரு படத்தில் நடித்தக் காட்சியில் எச்சரிக்கை வாசகம் இல்லாமல் இருந்ததாலும், படத்தின் பேனரிலேயே புகைப்பிடிக்கும் படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாலும் சுகாதாரத்துறை நோட்டீஸின் பேரில் அக்காட்சி நீக்கப்பட்டது. சமீபத்தில் வெளிவந்த சிம்பு நடித்த மாநாடு படத்திலும் எஸ்.ஜே.சூர்யா என்ட்ரியாகும் சீனில் வாயில் சிகரெட்டோடு வருவார். அந்த காட்சியிலும் எச்சரிக்கை வாசகம் இல்லாமல் இருந்தது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, எச்சரிக்கை வாசகங்கள் சேர்க்கப்பட்டது.

Recommended Video

Maaran Movie Review by Poster Pakiri | Dhanush | Malavika Mohanan | Karthick Naren | Filmibeat Tamil
இது போன்ற காட்சிகள் அவசியமா

இது போன்ற காட்சிகள் அவசியமா

அதே போல் மாறன் படத்தில் தனுஷ், மாளவிகா விமானத்தில் செல்லும் காட்சிகளில் மாளவிகா, விமானப்பணிப் பெண்ணிடம் விஸ்கி வேண்டும் என வாங்கிக் கொடுப்பார். சமீபத்தில் பல படங்களிலும் ஹீரோயின்கள் அல்லது பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் வைக்கப்படும் தவறான முன்னுதாரணமாக மாறி வருவதாக நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர். இது போன்ற காட்சிகள் அவசியம் தானா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X