Don't Miss!
- Finance
பிடன் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்.. எப்படி எதிர்கொள்ளப் போகிறது அமெரிக்கா?
- News
400அடி பள்ளம்.. 8நாள் போராட்டம் -நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6வது நபர் மீட்பு - நடந்தது என்ன?
- Sports
உப்புக்கு சப்பு இல்லாத போட்டி..? யார் சொன்னது ? கடைசி ஐபிஎல் லீக் போட்டியின் சம்பவங்கள்
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Lifestyle
வார ராசிபலன் 22.05.2022-28.05.2022 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“மாறன்“ பொல்லாத உலகம் பாடல்.. வேறலெவல் எனர்ஜி.. தனுஷின் நடனத்தால் மெர்சலான ரசிகர்கள் !
சென்னை : தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் முதல் பாடலான பொல்லாத உலகம் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது.
ரத்தம் படத்துல விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்... எகிறும் எதிர்பார்ப்பு!
இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ்
சினிமாவுக்கான முகமோ, தோற்றமோ இல்லை என்ற விமர்சனத்துடன் திரைத்துறையில் அறிமுகமானவர் தனுஷ். விமர்சனங்களை எல்லாம் படி கற்களாக்கி தனது திறமையால் மாஸ் ஹீரோ என்ற உச்சத்தை தொட்டு இருக்கிறார் தனுஷ். பாலிவுட் , ஹாலிவுட், டோலிவுட் என தனுஷின் புகழ் கொடி கட்டு பறந்துக்கொண்டு இருக்கிறது.

மாறன்
தனுஷ் தற்போது, துருவங்கள் 16 படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அனைவராலும் அறியப்பட்ட கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள மாறன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

முன்னணி நடிகர்கள்
மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

வேறமாறி டான்ஸ்
இந்நிலையில் மாறன் படத்தின் முதல் பாடலான பொல்லாத உலகம் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை தனுஷ் மற்றும் தெருகுரல் அறிவு பாடி உள்ளனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலின் தொடக்கத்தில் புல்லட்டில் கெத்தா படுத்திருக்கும் தனுஷ், செம ஸ்டைலாக நடனமாடி உள்ளார். வழக்கமான தனுஷின் நடனத்தை குறை சொல்ல முடியாது ஆனால், வேற மாறி ஆடி அனைவரையும் அசரவைத்துள்ளார் தனுஷ்.

செம பிஸி
தனுஷ் மாறன்,வாத்தி,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம், ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.