»   »  மச்சினி இயக்கத்தில் விஐபி2: மாஸ் அறிவிப்பை வெளியிட்டார் தனுஷ்

மச்சினி இயக்கத்தில் விஐபி2: மாஸ் அறிவிப்பை வெளியிட்டார் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் வர உள்ளதாக தனுஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 9ம் தேதி மாஸ் அறிவிப்பு வெளியிடப் போவதாக தனுஷ் கடந்த 3ம் தேதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவரது ட்வீட்டை பார்த்தவர்கள் செல்வராகவன் விஜய்யை வைத்து இயக்கும் படத்தை தனுஷ் தயாரிப்பார் என்று நினைத்தார்கள்.

இந்நிலையில் கூறியது போன்றே இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

விஐபி2

வேலையில்லா பட்டதாரி 2 படத்தை வுண்டர்பார் பிலிம்ஸுடன் சேர்ந்து கலைப்புலி தாணு தயாரிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாக அறிவித்துள்ளார் தனுஷ். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது.

சவுந்தர்யா

வி கிரியேஷன்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸுக்காக தமிழ், தெலுங்கில் எடுக்கப்படும் விஐபி 2 படத்தில் தனுஷை இயக்குவதில் பெருமைப்படுகிறேன் என சவுந்தர்யா ட்வீட்டியுள்ளார்.

தாணு

இன்ப நாளிது, இனிய நாளிது! Very happy to announce our next project with @dhanushkraja and @soundaryaarajni #VIP2 #RaghuvaranIsBack

ஷான் ரோல்டன்

இது நடக்கிறது என தனுஷின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.

English summary
Dhanush has made the mass announcement today as promised earlier.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil