நானே வருவேன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு… புலம்பும் தனுஷ் ரசிகர்கள்… என்னய்யா நடக்குது அங்க?

சென்னை: தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகிறது.

செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

நானே வருவேன் படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், ஷாக்கிங் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

எப்படி இருக்கும் நானே வருவேன்?

எப்படி இருக்கும் நானே வருவேன்?

காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களைக் கொடுத்த தனுஷ், யுவன், செல்வராகவன் கூட்டணி, தற்போது 3வது முறையாக இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம், சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. நானே வருவேன் படத்துக்கு தனுஷ் ரசிகர்களைத் தவிர மற்றவர்களின் அதிகம் எதிர்பார்ப்பு இல்லையெனத் தெரிகிறது.

 நானே வருவேன் டிக்கெட் புக்கிங்

நானே வருவேன் டிக்கெட் புக்கிங்

நானே வருவேன் படத்தில் இருந்து'வீரா சூரா', 'ரெண்டு ராஜா' ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், 29ம் தேதி வெளியாகும் நானே வருவேன் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியுள்ளது. 30ம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக நானே வருவேன் ரிலீஸாகிறது. அதேபோல், பொன்னியின் செல்வன் படத்துக்கான டிக்கெட் புக்கிங்கும் இன்று தொடங்கியது. இதனால், சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நானே வருவேன் FDFS ரத்து?

நானே வருவேன் FDFS ரத்து?

பொன்னியின் செல்வனுடன் வெளியாவதால் நானே வருவேன் படத்திற்கான டிக்கெட் புக்கிங் கொஞ்சம் மந்தமாகவே நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ரசிகர்களுக்கு இன்னும் ஒரு ஷாக்கிங் நியூஸாக, நானே வருவேன் FDFS ரத்து செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை எந்த திரையரங்குகளிலும் FDFS காட்சிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கவே இல்லை. திருச்சிற்றம்பலம் படத்துக்காக கால் கடுக்க காத்திருந்த ரசிகர்கள், நானே வருவேன் படத்தின் FDFS ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தனுஷ் ரசிகர்கள் குழப்பம்

தனுஷ் ரசிகர்கள் குழப்பம்

திருச்சிற்றம்பலம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தனுஷின் நானே வருவேன் படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. பெயரளவில் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக், செகண்ட் சிங்கிள் டிராக்களை மட்டும் படக்குழு வெளியிட்டுள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். தனுஷும் இதுவரை இந்தப் படம் குறித்து அதிகம் பேசாததால், அவரது ரசிகர்களே குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே தற்போது FDFS-ம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் FDFS குறித்து எதுவும் அப்டேட் வரும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X