நானே வருவேன் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட்: தனுஷ் ரசிகர்கள் இப்போ ஹேப்பியா இருப்பாங்க!

சென்னை: தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'நானே வருவேன்' படத்தின் டீசர் 15ம் தேதி வெளியானது.

செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

புதுப்பேட்டைக்குப் பிறகு நானே வருவேன் படத்தில் தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி இணைந்துள்ளது.

மிரட்டலாக வெளியான நானே வருவேன் டீசர்

மிரட்டலாக வெளியான நானே வருவேன் டீசர்

தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதே உற்சாகத்தில் அடுத்ததாக தனுஷின் 'நானே வருவேன்' படம் உருவாகியுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் டபுள் ஆக்டிங் செய்துள்ளார். தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில், நானே வருவேன் டீசர் செம்ம மிரட்டலாக வெளியாகி வைரலாகியுள்ளது. இதனால், இந்தப் படத்திற்கு தனுஷ் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

நானே வருவேன் கதை இதுதானா?

நானே வருவேன் கதை இதுதானா?

'நானே வருவேன்' படத்தில் இருந்து தனுஷின் போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டு வந்த படக்குழு, முதலில் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்திருந்தது. யுவனின் மரண மாஸ்ஸான இசையில் வெளியான 'வீரா சூரா' என்ற அந்தப் பாடல், பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில், தற்போது நானே வருவேன் டீசர் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் தரமாக இருக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். வாலி, காதல் கொண்டேன் ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் எனவும் கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன.

நானே வருவேன் சென்சார் அப்டேட்

நானே வருவேன் சென்சார் அப்டேட்

தனுஷ் - செல்வராகவன் காம்போவில் வெறித்தனமாக உருவாகியுள்ள இந்த டீசரில், தனுஷ் சைக்கோத்தனமாக நடித்து மிரட்டியுள்ளார். யுவனின் தெறிக்கும் பின்னணி இசையும் நானே வருவேன் டீசருக்கு பலம் சேர்த்துள்ளது. படம் முழுவதும் ராவான ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது. நானே வருவேன் செப்டம்பரில் வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, இதுவரை ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை. இந்நிலையில், படத்திற்கு சென்சாரில் யு/ஏ சர்ஃடிபிகேட் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நானே வருவேன் ரன்னிங் டைம்

நானே வருவேன் ரன்னிங் டைம்

மேலும், நானே வருவேன் படத்தின் ரன்னிங் டைம் பற்றியும் அப்டேட் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் 3 மணி நேரம் ரன்னிங் டைமில் வெளியாகி ரசிகர்களை சோதித்து வருகிறது. விக்ரமின் கோப்ரா படம் கூட ரன்னிங் டைம் அதிகம் இருப்பதாக விமர்சனம் எழுந்ததை அடுத்து, 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டது. இந்நிலையில், நானே வருவேன் படம் மொத்தம் 2 மணி 15 நிமிடம் ஓடும் என கூறப்படுகிறது. நானே வருவேன் ரன்னிங் டைம் பற்றிய இந்த அப்டேட், தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X