10000 வட இந்தியர்களுக்கு முன் தனுஷ் செய்தது எங்களுக்கு நம்பிக்கையளித்தது... நடிகர் நட்டி சுவாரசிய தகவல்

சென்னை: பொன்னியின் செல்வன் என்கிற மிகப் பெரிய படத்துடன் நானே வருவேன் திரைப்படமும் தனக்கு ஏற்ற வசூலை குவித்துக் கொண்டுதான் இருக்கிறது.

நடிகர் தனுஷ் அடுத்ததாக வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்த நடராஜ் என்கிற நட்டி தனுஷ் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

ராஞ்சனா

ராஞ்சனா

நடிகர் தனுஷ் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய வளர்ச்சியை முத்திரைபோல் பதித்துக் கொண்டே வருவார். அந்த வகையில் ஹிந்தியில் அவர் அறிமுகமான ராஞ்சனா திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஹிந்தி ரசிகர்கள் பெரும்பாலும் உடற்பயிற்சி செய்து பாடி பில்டர் போல இருக்கும் நடிகர்களை விரும்பி பார்ப்பார்கள். ஆனால் தங்களைப் போல எதார்த்தமாக இருக்கும் ஒரு நபரை கதாநாயகனாக பார்த்ததும் மொத்த வட இந்தியாவும் நடிகர் தனுஷை ஏற்றுக் கொண்டது என்றே சொல்லலாம்.

தமிழர்கள்

தமிழர்கள்

நடிகர் தனுசை தவிர்த்து இரண்டு தமிழர்கள் அந்தப் படத்தில் முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றினார். ஒன்று ஏ.ஆர்.ரகுமான் மற்றொரு நபர் சதுரங்க வேட்டை படத்தில் நடித்த நடராஜ். இங்கு நடிகராகத்தான் இவரை பலருக்கும் தெரியும். ஆனால் பாலிவுட்டில் இவர் பெரிய ஒளிப்பதிவாளர். ராஞ்சனா படத்திற்கும் நட்டிதான் ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழில் யூத் மற்றும் புலி ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் நட்ராஜ். தமிழில் தனுஷ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவில்லை என்றாலும் கர்ணன் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார் நட்டி.

மிரட்டிய தனுஷ்

மிரட்டிய தனுஷ்

காஞ்சனா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது சூட்டிங் நடக்காத ஒரு ஊரில்தான் படம் பிடித்தார்களாம். அதனால் கிட்டத்தட்ட 10000 மக்களுக்கு மேல் கூடியிருந்தனராம். காட்சிப்படி தனுஷை திட்டி விட்டு கதாநாயகி செல்லும் பொழுது ஒரு பழைய இந்தி பாடல் ரேடியோவில் ஒலிபரப்பாகும். அதற்கு ஏற்றார் போல தனுஷ் நடனமாட வேண்டும். அந்தக் காட்சிக்கு கோரியோகிராஃபர் கிடையாதாம். அதனால் அந்த பாட்டை மட்டும் ஒரு முறை போட்டுக் காட்டச் சொன்னாராம் தனுஷ்.

ஆர்ப்பரித்த மக்கள்

ஆர்ப்பரித்த மக்கள்

அதன் வரிகளின் பொருளை கூறவா என்று இயக்குநர் சொன்னபோது கூட, வேண்டாம் நான் ரிதத்திற்கு ஏற்றார் போல நடனம் ஆடுகிறேன் என்று அந்தக் காட்சியில் நடித்தாராம். தனுஷ் நடித்து முடித்த அடுத்த கணமே அங்கிருந்த பத்தாயிரம் நபர்களும் கை தட்டி பாராட்டினார்களாம். அப்போதே தனுஷை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை படக் குழுவினருக்கு வந்தது என்று நட்டி கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X