»   »  மெகா ஸ்டாருக்கே எங்க சூப்பர் ஸ்டார்தான் பாதுகாப்பு!- கலக்கும் தொடரி பஞ்ச்

மெகா ஸ்டாருக்கே எங்க சூப்பர் ஸ்டார்தான் பாதுகாப்பு!- கலக்கும் தொடரி பஞ்ச்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடரி படத்தில் தனுஷ் பேசுவது போல இடம்பெற்றுள்ள ஒரு பஞ்ச்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் தொடரி. தனுஷுடன் முதல் முறை ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.


Dhanush's punch dialogue in Thodari becomes viral

இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்டது.


இந்த ட்ரைலரில் ஒரு கமாண்டோவிடம் தனுஷ் பேசுவதாக இடம்பெறும் ஒரு பஞ்ச் டயலாக்தான் ஹைலைட்:


"தளபதி படம் பாத்திருக்கீங்களா... அதுல உங்க மெகா ஸ்டார் மம்முட்டிக்கே எங்க சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க பாதுகாப்பு.. நாங்களும் பெரிய ஆளுங்கதான்."


இந்த பஞ்ச் டயலாக்கை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் தனுஷ், ரஜினி ரசிகர்கள்.

English summary
Dhanush's punch dialogue on Rajini in Thodari movie is become viral in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil