»   »  ஆனந்த் மகிந்திரா சார்... காலா ஷூட் முடிஞ்சதும் நாங்களே அந்த ஜீப்பைத் தர்றோம்! - தனுஷ்

ஆனந்த் மகிந்திரா சார்... காலா ஷூட் முடிஞ்சதும் நாங்களே அந்த ஜீப்பைத் தர்றோம்! - தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : காலா படத்தில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மகேந்திரா ஜீப்பில் உக்கார்ந்து இருப்பதுபோல் வெளியானது.

அந்தப் படத்தை ட்விட்டரில் போட்டு, 'தலைவர் உபயோகித்த இந்த ஜீப் பற்றிய தகவல் இருந்தால் தயவுசெய்து எங்களுக்கு தெரிவியுங்கள். அதை வாங்கி எங்கள் நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்க விருப்பப் படுகிறோம்' என்று கூறியிருந்தார்.


Dhanush's reply to Mahendra Chairman

அதைப் பார்த்த காலா படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் தனுஷ், "மிக்க நன்றி சார், தற்போது அந்த ஜீப்பை படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் ஜீப்பை உங்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்கிறோம்," என்று பதில் கூறியுள்ளார்.


இந்தியாவில் ஜீப் உற்பத்தியில் மகேந்திரா நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. படத்தில் உபயோகிக்கப்படும் இந்த மாடல் ஜீப் தற்போது உற்பத்தியில் இல்லை. ரஜினி நடித்த ஜீப் என்பதால் அதற்கு தனி அந்தஸ்து கொடுத்து நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்கப் போவதாக, நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இதுவரையிலும் இந்தியாவில் எந்த நடிகரும் படத்தில் உபயோகித்த வாகனங்கள் இப்படி மியூசியத்தில் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ரஜினியால் மகேந்திரா ஜீப்புக்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளது. மீண்டும் அதே மாடல் ஜீப் வெளி வந்தாலும் ஆச்சரியமில்லை.

English summary
Mahendra Jeep company Chairman Anand Mahendra has asked for the Jeep used by Rajinikanth in Kaala movie. Dhanush has replied him saying the jeep is presently used in the shooting and will ensure it reaches Anand Mahendra after the completion of the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil