»   »  தனுஷின் தங்கமகன் பாடல்கள் நவம்பர் 27 முதல்

தனுஷின் தங்கமகன் பாடல்கள் நவம்பர் 27 முதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கமகன் படத்தின் பாடல்களை நவம்பர் 27 ம் தேதி வெளியிடவிருப்பதாக தனுஷ் தெரிவித்து இருக்கிறார்.

தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். வேலை இல்லாப் பட்டதாரி 2 என்று தலைப்பு வைக்கபட்டு பின்னர் தங்கமகனாக இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது.


Dhanush's Thanga Magan Audio Release Date Here

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை நவம்பர் 27 ம் தேதியில் வெளியிடுவதாக தனுஷ் அறிவித்து இருக்கிறார். நவம்பர் 26 நள்ளிரவில் இப்படத்தின் பாடல்களை ஐடியூனில் கேட்டு மகிழலாம் என்று அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.


நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில் தங்கமகன் படம் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் உதயநிதி ஸ்டாலின் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் கெத்து படமும் வெளியாகிறது.


தங்கமகன், கெத்து 2 திரைப்படங்களிலும் நாயகியாக எமி ஜாக்சன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் தனது இசையால் ஷாக்கடிக்க வைத்த அனிருத், தங்கமகனில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்று காத்திருந்து பார்க்கலாம்.


English summary
Actor Dhanush he took Wrote on Twitter "Thangamagan audio releases on 27th Nov..iTunes on 26th midnight".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil