»   »  தனுஷின் ‘தங்கமகன்’... டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ்!

தனுஷின் ‘தங்கமகன்’... டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தங்கமகன் படம் வரும் டிசம்பர் 18ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

வேல்ராஜ் - தனுஷ் கூட்டணியில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர்களது கூட்டணியில் புதிய படம் தயாராகி வந்தது.


Dhanush’s Thangamagan to release on December 18!

இப்படத்தில் தனுஷின் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள். வேலையில்லா பட்டதாரி படத்திற்கு இசையமைத்த அனிருத்தே இப்படத்திற்கும் இசை.


தங்கமகன்...


ஆரம்பத்தில் பெயரிடப்படாத இந்தப் படத்தை வேலையில்லா பட்டதாரி -2 என்றே குறிப்பிட்டு வந்தனர். பின்னர் அப்படத்திற்கு தங்கமகன் எனப் பெயரிடப்பட்டது. படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ரிலீஸ் தேதி...


இது தொடர்பாக தனுஷ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘தங்கமகன் வரும் டிசம்பர் 18ம் தேதி ரிலீசாகிறது' எனத் தெரிவித்துள்ளார்.பர்ஸ்ட்லுக் போஸ்டர்...


சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வெற்றிகரமான ஆண்டு...


இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே தனுஷிற்கு வெற்றிகளாக குவிந்து கொண்டிருக்கிறது. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. விருதுகளும் குவிந்தன.


மாரியாய் பொழிந்த வசூல்...


இது தவிர தனுஷ் நாயகனாக நடித்த ஷமிதாப், அனேகன், மாரி உள்ளிட்ட படங்களும் வசூல் மழை பொழிந்தன. அந்த வகையில் தங்கமகனும் வெற்றி பெறுவான் என எதிர்பார்க்கப் படுகிறது.


English summary
Dhanush's Thangamagan is now targeting to cash in Christmas fervour as he revealed that the film will release on December 18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil