ஜூலையில் ரிலீசுக்கு தயாராகும் தனுஷின் தி கிரே மேன்... இதுவும் ஓடிடி ரிலீஸ் தானா!
சென்னை : நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார்.
அவரது நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் அட்ராங்கி ரே படம் ரிலீசான நிலையில் அடுத்ததாக ஹாலிவுட் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஹாலிவுட்டில் அவர் நடித்துள்ள தி கிரே மேன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என்று கலந்து கட்டி அடித்து வருகிறார். பம்பரமாக சுற்றி சுற்றி நடித்து வருகிறார். மனிதருக்கு காலில் றெக்கை இருக்குமோ என்று ரசிகர்கள் எண்ணும் வகையில் இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ஹாலிவுட் படம்
தமிழில் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் அவரது அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் பாலிவுட்டில் அட்ராங்கி ரே படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

வாத்தி படம்
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள வாத்தி என்ற படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இதன்மூலம் நேரடியாக தெலுங்கில் அவர் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இரு தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர் கெட்டப்பில் தனுஷ்
படத்தில் பேராசிரியராக தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த போஸ்டரில் மாணவராக தனுஷ் காட்சியளிப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அவரது ஹிட் லிஸ்டில் அடுத்தடுத்த படங்கள் காணப்படும் நிலையில், தி கிரே மேன் ஹாலிவுட் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஜூலை 2022ல் ரிலீஸ்?
இந்தப்படம் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ள நிலையில், படம் வரும் ஜூலையில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக அமெரிக்காவில் குடும்பத்தினருடன் கடந்த ஆண்டில் முகாமிட்டிருந்த தனுஷ் சூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை வந்து மாறன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தொடர்ந்து படத்தின் சூட்டிங்கை முடித்து கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











