Don't Miss!
- Sports
இவரை நியாபகம் இருக்கா? தோனியின் மானத்தை காப்பாற்றிய ஜோகிந்தர் சர்மா.. ஓய்வு முடிவை அறிவித்தார்
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Thiruchitrambalam Box Office: பாசிட்டிவ் விமர்சனங்கள் பறக்குது.. திருச்சிற்றம்பலம் 2வது நாள் வசூல்!
சென்னை: தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்களே பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகிறது.
Recommended Video
தனுஷ் படங்கள் எல்லாம் தியேட்டர் மெட்டீரியல் என தெரியாமலே ஓடிடியில் வெளியிட்டு ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட படங்களை வீணடித்து விட்டார்கள் என ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.
தைரியமா நீ தியேட்டரில் படத்தை இறக்கு தலைவா மத்தத நாங்க பார்த்துக்குறோம் என மாஸ் காட்டி வருகின்றனர்.
madras
day
22..திரையில்
மெட்ராஸ்
பாஷை
பேசிய
சந்திரபாபு..அசத்திய
சோ,
தேங்காய்,
சுருளிராஜன்,
லூஸ்மோகன்

ஐஸ் பிரியாணி
பழைய சோறு என்பதையே ஐஸ் பிரியாணின்னு சொல்லி சாப்பிடக் கூடிய ஊருய்யா எங்க ஊரு என்பது போல பல படங்களில் பார்த்து புளித்துப் போன கதையாக இருந்தாலும், இயக்குநர் அட்லி ஜெயித்ததை போல இந்த முறை மித்ரன் ஆர் ஜவஹரும் ஜெயித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு விளாசித் தள்ளும் விமர்சகர்களும் படத்தை பாராட்டி உள்ளனர்.

காப்பாற்றிய நித்யா மேனன்
180 டிகிரி படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே நல்ல நடிப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் மெர்சல் நடிகை ஓகே கண்மணி நித்யா மேனனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்றாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தனது தேர்ந்த நடிப்பால் சிக்ஸர் அடித்து விடுகிறார். திருச்சிற்றம்பலம் படம் தப்பிக்க முக்கிய காரணமே சோபனாவாக அவர் நடித்துள்ள நடிப்பு தான்.

காட்சிகள் அதிகரிப்பு
போட்டிக்கு எந்த படமும் இல்லாத நிலையில், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் சீதா ராமம், விருமன் படங்களின் காட்சிகளை குறைத்து விட்டு திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் காட்சிகளை தியேட்டர் நிர்வாகங்கள் ஒதுக்கி உள்ளன. இந்த 4 நாட்களில் மொத்த வசூலையும் அள்ளி விட வேண்டும் என்கிற முனைப்புடன் தியேட்டர் ஓனர்கள் ஸ்பெஷல் காட்சிகளுக்கும் கூடுதல் ஸ்க்ரீன்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

சந்தோஷத்தில் சன் பிக்சர்ஸ்
அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் என வரிசையாக படங்கள் வசூலை குவித்தாலும், விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கின. இந்நிலையில், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு வசூலும் விமர்சனமும் பாசிட்டிவ் ஆக அமைந்த நிலையில், சன் பிக்சர்ஸ் ரொம்பவே சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளது. நம்ம பழம் ஜெயிச்சுட்டான், பிளாக்பஸ்டர் ஹிட் என இரண்டாவது நாளிலேயே போஸ்டர் அடித்து விட்டது.

வசூல் எவ்வளவு
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் 9 கோடியும் உலகளவில் 11 கோடியும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டாம் நாளான நேற்று திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் மொத்தமாக 10 கோடி வந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு நாட்களில் ஒட்டுமொத்தமாக 21 கோடி ரூபாய் வரை திருச்சிற்றம்பலம் வசூலித்து என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மேலும், 20 கோடி வசூல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.