பழக பழக பிடிக்குதே...பழைய ரணங்கள் மறக்குதே...தனுஷ் ஏன் இப்படியொரு வரி எழுதினாரு ?

சென்னை : யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். தங்கமகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் காம்போ மீண்டும் இணைந்துள்ள படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொாடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். 'திருச்சிற்றம்பலம்' படம் ஆகஸ்ட் 18-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இதுவாவது கைகொடுக்குமா

இதுவாவது கைகொடுக்குமா

வரிசையாக தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்து விட்டன. இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் இந்த படத்தின் முலம் மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

3 கெட்அப்களில் தனுஷ்

3 கெட்அப்களில் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் முன்று விதமான கெட்அப்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கையில் பல்வேறு கால கட்டங்களில் ஏற்படும் காதல் உணர்வுகள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானிசங்கர், ராஷி கன்னா என தனுஷிற்கு 3 ஜோடிகள்.

 எதிர்ப்பை பெற்ற தாய் கிழவி

எதிர்ப்பை பெற்ற தாய் கிழவி

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "தாய் கிழவி" சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை சமயம் சில விமர்சனங்களையும், எதிர்ப்பையும் சந்தித்தது. அனிருத் ஏன் ஒரே மாதிரி ஸ்டையிலிலேயே இசையமைக்கிறார் என ரசிகர்கள் சிலர் அலுத்துக் கொண்டனர். வயதானவர்களை அவமதிக்கும் விதமாக தாய் கிழவி என எழுதப்பட்டுள்ளதாக சிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனுஷ் வரிகளில் செகண்ட் சிங்கிள்

தனுஷ் வரிகளில் செகண்ட் சிங்கிள்

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நேற்று வெளியிடப்பட்டது. மேகம் கருக்காத என துவங்கும் இந்த பாடலை தனுஷ் எழுதி, அவரே பாடி உள்ளார். தாய் கிழவி பாடலையும் அவரே எழுதி , பாடி இருந்தார். காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Recommended Video

Ram Pothineni Exclusive | |Dhanush ஐ தெலுங்கில் Launch செய்த பெருமை எங்களுக்கு இருக்கு | *Interview
எதுக்கு இந்த வரி எழுதினார்

எதுக்கு இந்த வரி எழுதினார்

இந்த பாடலில் பழக பழக பிடிக்குதே...பழைய ரணங்கள் மறக்குதே என தனுஷ் ஒரு வரி எழுதி உள்ளார். இதற்கு என்ன அர்த்தம், மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த சோகத்தை தான் இந்த பாடல் வரிகளில் தனுஷ் காட்டி உள்ளாரா என ரசிகர்கள் பலர் கேட்டு வருகின்றனர். பாடலின் வீடியோவில் தனுஷ், ராஷி கன்னா மற்றும் நித்யா மேனனுடன் ஆடி பாடுவதை போல் உள்ளது. ஆனால் வரிகளை கேட்டால் சோகத்தை கொட்டுகிறது. ஏன் இந்த குழப்பம் என்றும் ரசிகர்கள் புரியாமல் குழப்பத்துடன் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X