Don't Miss!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- News
நீட் விபரீதம்.. 1311 முதுகலை மருத்துவ இடங்கள் வீண்.. மத்திய அரசுக்கு திமுக எம்பி வில்சன் கடிதம்
- Technology
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- Finance
சாமானிய மக்களின் முதலீடு என்னவாகும்.. அதானி குழுமத்தில் எஸ்பிஐ, எல்ஐசி-ன் நிலை என்ன?
- Lifestyle
கக்கா போக முடியாம ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகள சாப்பிடுங்க... உடனே சரியாகிடுமாம்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெளிநாட்டில் அஜித்தின் வலிமை பட வசூலை ஓரங்கட்டிய தனுஷின் திருச்சிற்றம்பலம்...ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சென்னை : தனுஷ், நித்யாமேனன், பாரதி ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் திருச்சிற்றம்பலம் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. 2022 ம் ஆண்டில் வெளிநாட்டில் அதிக வசூலை பெற்ற, வரவேற்பை பெற்ற தமிழ் சினிமாக்களின் பட்டியலில் டாப் 5 பட்டியலில் இணைந்துள்ளது.
வலிமை, விக்ரம் படங்களை தொடர்ந்து தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்கும் வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விரைவில் 100 கோடி கிளப்பிலும் திருச்சிற்றம்பலம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலாய்த்த
தியேட்டர்
ஓனர்:
காலில்
விழுந்து
கட்டியணைத்துக்
கொண்ட
விஜய்
தேவரகொண்டா

3வது இடத்திற்கு முன்னேறிய திருச்சிற்றம்பலம்
ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நிலையான கலெக்ஷனை திருச்சிற்றம்பலம் படம் பெற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது திருச்சிற்றம்பலம்.

வலிமை வசூலை முந்திடுச்சா
லேட்டஸ்ட் தகவலின் படி, ஆஸ்திரேலியா மற்றும் ஃபிரான்சில் அஜித்தின் வலிமை பட வசூலை தனுஷின் திருச்சிற்றம்பலம் முந்தி உள்ளது. இந்த நாடுகளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் கமலின் விக்ரம் முதலிடத்திலும், விஜய்யின் பீஸ்ட் படம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

எவ்வளவு வசூல்
திருச்சிற்றம்பலம் படம் ஆஸ்திரேலியாவில் ரூ.1.7 கோடிகளையும், ஃபிரான்சில் 13,000 க்கும் அதிகமான என்ட்ரிகளையும் பெற்றுள்ளது. அமெரிக்காவிலும் வலிமை படத்தின் வசூலை திருச்சிற்றம்பலம் ஓரங்கட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

விரைவில் 100 கோடி கிளப்
அதே சமயம் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் திருச்சிற்றம்பலம் படம் 65 கோடிகளை வசூல் செய்துள்ளது. விரைவில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்டில் திருச்சிற்றம்பலம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.படக்குழு சார்பில் இதுவரை திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் பற்றி எந்த தகவலையும் உறுதி செய்யவில்லை. அதே சமயம் மெகா பிளாக்பஸ்டர் என்று மட்டுமே குறிப்பிட்டு வருகின்றனர்.

குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் படம்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் படம் இளைஞர்களை மட்டுமின்றி குடும்ப ஆடியன்சையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இது தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. 7 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ள தனுஷ் - அனிருத் கூட்டணியும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளன.