»   »  என்னை நோக்கிப் பாயும் தோட்டா... தனுஷின் முதல் கெட்டப் வெளியானது!

என்னை நோக்கிப் பாயும் தோட்டா... தனுஷின் முதல் கெட்டப் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இரண்டு தோற்றங்கள்

இரண்டு தோற்றங்கள்

தனுஷுக்கு இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்கள். கச்சிதமாக ஷேவ் செய்த முகத்துடன் முதல் தோற்றம். அடுத்து இன்னொரு கெட்டப் இருக்கிறதாம். கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் கவுதம் மேனன்.

புதுசு

புதுசு

"தனுஷை இதுவரை பார்க்காத புதிய தோற்றத்தில் பார்க்கப் போகிறீர்கள். அந்த கெட்டப்புக்கு ரெடியாகத்தான் இந்த இடைவெளி," என்கிறார் கவுதம்.

துருக்கி

துருக்கி

எனை நோக்கிப் பாயும் தோட்டாவின் முதல் ஷெட்யூலில் பெரும்பகுதியை துருக்கியில் போய் எடுத்திருக்கிறார்கள். துருக்கியின் பிரமாதமான லொகேஷன்களை பாடல் காட்சிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்களாம்.

சிம்பு படம்

சிம்பு படம்

இதற்கிடையில் சிம்புவை வைத்து தான் எடுத்து வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்து, ரிலீஸ் பண்ணும் முயற்சிகளிலும் தீவிரமாக இருக்கிறாராம் கவுதம் மேனன்.

  English summary
  First look of Dhanush’s Enai Noki Paayum Thotta, which is being directed by Gautham Vasudev Menon is out. Dhanush sports a clean shaven look in the first look but sources say that the actor will also have another getup in the film.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil