Don't Miss!
- News
"அதிமுகவின் தற்போதைய நிலைக்கு டெல்லி தான் காரணம்" டிடிவி தினகரன் ஓபன் டாக்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
தியேட்டர் ரைட்ஸ் வாங்க ஆளில்லை... மீண்டும் தனுஷின் வாத்தி ரிலீஸ் தேதியில் மாற்றமா?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு மொத்தம் 5 திரைப்படங்கள் வெளியாகின.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என வெரைட்டியாக வெளுத்து வாங்கிய தனுஷ், ரசிகர்களை சூப்பராக என்டர்டெயின்மெண்ட் செய்தார்.
இதனைத் தொடர்ந்து தனுஷின் வாத்தி, கேப்டன் மில்லர் படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன
இந்நிலையில், வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் அஜித் படத்துக்கு வந்த சிக்கல்... கடைசி நேரத்துல இப்படியா?: என்னதான் நடக்குது?

2022ம் ஆண்டின் கலக்கல் ஸ்டார்
தமிழ்த் திரையுலகில் தனித்துவமான நடிகராக வலம் வரும் தனுஷ், கடந்தாண்டு மாஸ் காட்டியுள்ளார். ஹாலிவுட்டில் தி கிரே மேன், பாலிவுட்டில் அத்ரங்கி ரே, தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என மொத்தம் 5 படங்கள் அவர் நடிப்பில் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூலிலும் என வெரைட்டியாக கடந்தாண்டை நிறைவு செய்திருந்தார் தனுஷ். அதே 2022 இறுதியில் தனுஷின் வாத்தி திரைப்படமும் ரிலீஸாகவிருந்து ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் வாத்தி
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு வந்த தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அவர் முதன்முதலாக தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷுடன் சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் என்ற டைட்டிலிலும் இந்தப் படம் உருவாகியுள்ளது. மேலும், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதியில் மாற்றம்
வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒரேயாண்டில் தனுஷின் 6 திரைப்படங்கள் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வாத்தி ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் 2023 பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர்.

தியேட்டர் ரைட்ஸில் சிக்கல்
இந்நிலையில், தற்போது மீண்டும் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அன்புச்செழியன் கைப்பற்றியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் பின்வாங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருந்ததாம். இந்நிலையில், தான் தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வாத்தி தியேட்டர் ரைட்ஸை வாங்கியதாக சொல்லப்படுகிறது. மாஸ்டர், கோப்ரா படங்களை தயாரித்துள்ள லலித் குமார், விஜய்யின் வாரிசு பட தியேட்டர் ரைட்ஸையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.