வாத்தி கம்மிங்...தனுஷின் வாத்தி ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியானது...நாளை டீசர் ரிலீஸ்
சென்னை : தனுஷ் தனது 39வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இதற்காக அவரின் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் தனுஷ் தற்போது நடித்து வரும் படங்கள் மற்றும் கமிட்டாகி உள்ள படங்களில் அப்டேட் மற்றும் அறிவிப்புக்கள் வெளியாக உள்ளதாக சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜுலை 27 ம் தேதியும், டீசர் ஜுலை 28 ம் தேதியும் வெளியிடப்படும் என போஸ்டர் ஒன்றுடன் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த படத்தின் மூலம் டாப் ஹிட் நாயகரான தனுஷ் தற்போது டோலிவுட்டில் களமிறங்கி உள்ளார்.தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார்.

இரட்டை வேடத்தில் தனுஷ்
வெங்கி அட்லூரி என்பவர் இயக்கி வரும் வாத்தி படத்தில் மாஸ்டர் ,ஸ்டூடென்ட் என தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. வாத்தி படத்தின் இறுதி கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

6வது முறையாக கூட்டணி
பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் மற்றும் மாறன் படங்களை அடுத்து தனுசுடன் ஜிவி பிரகாஷ் கூட்டணி ஆறாவது முறையாக வாத்தி படத்தில் இணைந்துள்ளனர். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இது படமாக்கப்படுகிறது.

வாத்தி கம்மிங்
இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றிலும் புத்தகங்கள் அடுக்கப்பட்ட லைப்ரரி போன்ற இடத்தில், டேபிள் லேம்ப் வெளிச்சத்தில் தனுஷ் அமர்ந்து, ஏதோ சீரியசாக எழுதிக் கொண்டிருப்பது போன்று இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை வாத்தி டீசர்
அதோடு டைட்டிலில் தமிழில் வாத்தியில் 'த்' என்ற எழுத்திற்கு மேல் பேனா முனை போலவும், தெலுங்கில் Sir என்ற பெயரில் 'I'என்ற எழுத்திற்கு மேல் பேனா முனை போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் மாஸ்டர் ரோலில் நடிப்பதால் இப்படி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாத்தி படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வேற மாறி இருக்கே
தனுஷ் இதற்கு முன் நடித்த மாறன் படத்தில் அவர் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். அதில் பேனா முனை போன்ற அமைப்பு இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் தனஷ் நடித்த படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் தனுஷ் அதிரடி ஆக்ஷன் அல்லது கெத்தாக, ஸ்டையிலாக இருப்பது போல் தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் வாத்தி படத்தில் அதற்கு நேர்மாறாக அமைக்கப்பட்டுள்ளது.

டிரெண்டிங்கில் வாத்தி ஃபர்ஸ்ட்லுக்
வாத்தி ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இது டிரெண்டாகி உள்ளது, ட்விட்டரில் #VaathiFirstLook என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த போஸ்டர் எப்படியும் ஒரு நாளைக்கும் 1 லட்சம் லைக்குகளை பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











