»   »  பொங்கல் தினத்தில் மோதிக்கொள்ளும் தனுஷ் - சிம்பு?

பொங்கல் தினத்தில் மோதிக்கொள்ளும் தனுஷ் - சிம்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கலுக்கு தனது அச்சம் என்பது மடமையடா படத்தின் சிங்கிள் டிராக் பாடலை சிம்பு வெளியிட, பதிலுக்கு தனது படத்தின் பர்ஸ்ட் லுக்+டைட்டில் இரண்டையும் வெளியிடுகிறார் தனுஷ்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் கடந்த புத்தாண்டு அன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Dhanush - Simbu Clash on Pongal?

இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் ஒன்றை பொங்கல் தினத்தில் வெளியிட சிம்பு முடிவு செய்திருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பின் தாமரை, ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் வெளியாகும் பாடல் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் படத்தின் டைட்டில்+ பர்ஸ்ட் லுக் இரண்டையும் பொங்கலன்று வெளியிட தனுஷ் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

இதனால் சிம்பு, தனுஷ் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக செய்திகள் அடிபட்டு வருகின்றன.

தனுஷ், சிம்புவின் சிங்கிள் டிராக் மற்றும் பர்ஸ்ட் லுக் ஒரே நாளில் வெளியாகும் போது சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களும் கண்டிப்பாக மோதிக் கொள்வார்கள்.

ஆனால் இது எல்லாம் தெரிந்தும் கூட இருவரும் இப்படி செய்கிறார்களே என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

English summary
Sources Said Simbu's Acham Enbathu Madamaiyada Single Track and Dhanush's First Look Poster Released on Pongal day.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil