»   »  தனது வில்லனின் படத்துக்கு பாடல் பாடிக்கொடுத்த தனுஷ்!

தனது வில்லனின் படத்துக்கு பாடல் பாடிக்கொடுத்த தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் மூத்த பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் ஆவார்.

அதையடுத்து தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள 'படைவீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் விஜய் யேசுதாஸ்.

இந்தப் படத்தில் இயக்குனர் பாரதிராஜா, 'கல்லூரி' நாயகன் அகில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, அம்ரிதா நாயகியாக நடித்திருக்கிறார்.

படத்தைப் பார்த்த தனுஷ் :

படத்தைப் பார்த்த தனுஷ் :

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அனைதுகட்டப் பணிகளும் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு இந்தப் படத்தை போட்டுக் காட்டியுள்ளார்கள்.

மதுரைப் பாடல் :

மதுரைப் பாடல் :

அப்போது இந்தப் படத்திற்காக நான் ஒரு பாடல் பாடுகிறேன் என்று சொன்னாராம் தனுஷ். அதையடுத்து மதுரை சூழலில் ஒரு பாடலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரெக்கார்டிங் செய்திருக்கிறார்கள்.

பாடலாசிரியர் :

பாடலாசிரியர் :

கார்த்திக் ராஜா இசையில் இந்த பாடலை பாடலாசிரியர் பிரியன் எழுதியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த 'உத்தமபுத்திரன்' படத்திற்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

நம்பிக்கை :

நம்பிக்கை :

இன்னொரு நடிகரின் படம் என்றபோதும், கதை பிடித்துப்போனதால் ஆர்வத்துடன் அந்த பாடலை பாடிக்கொடுத்த தனுஷ், 'படைவீரன்' படம் பெரிய வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளாராம். இதனால் 'படைவீரன்' படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

English summary
Vijay Yesudas has acted in the lead role in 'Padaiveeran movie. Dhanush has sung a song in the backdrop of Madurai for this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil