»   »  சிவகார்த்திக்கேயனின் வெற்றியை தள்ளி நின்று பார்க்கிறார் தனுஷ்: அனிருத்

சிவகார்த்திக்கேயனின் வெற்றியை தள்ளி நின்று பார்க்கிறார் தனுஷ்: அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் - சிவகார்த்திகேயனுக்கு இடையே நட்பில் முதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்றும், இப்போதும் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய நண்பர்களாகத்தான் உள்ளனர் என்றும் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 'காக்கி சட்டை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராதது மற்றும் ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனைப் பார்த்தவுடன் வெளியேறியது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சிவகார்த்திக்கேயன் இதனை மறுத்தாலும், தனுஷ் இதுபற்றி எதுவும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கிறார். இதனிடையே தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருக்குமே நெருக்கமான நண்பராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இருவருக்கும் இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை

"தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து நான் இசையமைத்த 'காக்கி சட்டை' படம் வெளியாக இருக்கிறது. அப்புறம் எப்படி சண்டை இருக்கும்?

எதிர்நீச்சல் நேரத்தில்

எதிர்நீச்சல் நேரத்தில்

'எதிர் நீச்சல்' நேரத்திலேயே இப்படியான வதந்திகள் வரும் என்று நினைத்தோம். சிவகார்த்திகேயனுக்கு 2 படங்கள் வெளியானதற்கு பிறகு இந்தப் பிரச்சினை தொடங்கி இருக்கிறது.

வளர்ச்சியில் சந்தோசம்

வளர்ச்சியில் சந்தோசம்

உண்மையாகவே அப்படி ஒரு பிரச்சினையே கிடையாது. ஒருவருடைய வளர்ச்சி இன்னொருத்தருக்கு சந்தோஷத்தைதான் கொடுத்திருக்கிறது.

இப்போது தேவையில்லை

இப்போது தேவையில்லை

தனுஷ் சார் வராமல் இருந்தது, ஏற்கெனவே பேசி வைத்து நடந்ததுதான். இப்போது சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய ஸ்டார். அவருக்கு யாருடைய உறுதுணையும் இப்போது தேவையில்லை.

சிவகார்த்திக்கேயனுக்கு பாதிப்பு

சிவகார்த்திக்கேயனுக்கு பாதிப்பு

தனுஷ் சார் இப்போது வந்து பேசினார் என்றால், அது சிவாவின் வளர்ச்சியைதான் குறைவாக்கும். சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்காக தோள் கொடுத்தவர், இப்போது வளர்ந்த பிறகு சற்றே தள்ளி நின்று மகிழ்கிறார்.

நட்பின் முதிர்ச்சி

நட்பின் முதிர்ச்சி

தனுஷின் இந்த அணுகுமுறை உண்மையில் சிவாவுக்கு நெகிழ்வான ஒன்றுதான். இருவரது நட்பிலும் தெளிவாகத் தெரிவது முதிர்ச்சிதானே தவிர விரிசல் அல்ல" என்று கூறியுள்ளார் அனிருத்.

English summary
It was all started when the media questioned why Dhanush was not present at the Sivakarthikeyan’s Kakki Sattai Promo, and it got clarified later stating, Aniruth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil