»   »  மச்சினி சவுந்தர்யாவுடன் மும்பைக்கு பறந்த தனுஷ்

மச்சினி சவுந்தர்யாவுடன் மும்பைக்கு பறந்த தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்துடன் மும்பைக்கு சென்றுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஸ்வினை பிரிந்த பிறகு படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார். கலைப்புலி தாணு தயாரிக்கும் அந்த படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ளது.

படத்தில் புதுமுகங்கள் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

 

தனுஷ்

தனுஷ்

கதையை கேட்ட ரஜினிகாந்த் ஹீரோவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கேம்மா. நம்ம மாப்பிள்ளை தனுஷையே நடிக்க வை கரெக்டாக இருக்கும் என்று சவுந்தர்யாவிடம் கூறினாராம்.

ஹீரோ

ஹீரோ

அப்பா ரஜினியே சொன்ன பிறகு சவுந்தர்யா மறுக்கவா போகிறார். இதையடுத்து தனது படத்தின் ஹீரோவாக தனுஷை சவுந்தர்யா தேர்வு செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

சவுந்தர்யா

சவுந்தர்யா

புதுப்பட வேலைகளில் பிசியாக இருக்கும் சவுந்தர்யா மாமா தனுஷுடன் மும்பைக்கு சென்றுள்ளார். தனுஷுக்கு பாலிவுட் நடிகை சோனம் கபூரை ஜோடியாக்க சவுந்தர்யா நினைக்கிறார். இந்நிலையில் அவர்கள் மும்பைக்கு சென்றுள்ளனர்.

சோனம்

சோனம்

சோனம் கபூரை சந்தித்து படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சவுந்தர்யாவும், தனுஷும் மும்பைக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோனமும், தனுஷும் ராஞ்ஹனா இந்தி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Soundarya Rajinikanth has gone to Mumbai with Dhanush. Buzz is that they have gone to Mumbai in connection with Nilavukku Enmel Ennadi Kobam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil