Don't Miss!
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொன்னியின் செல்வனுடன் மல்லுக்கட்டும் தனுஷின் நானே வருவேன்... 6வது நாளிலும் வசூலில் குறையில்லை…
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒருநாள் முன்னதாக நானே வருவேன் வெளியானது.
நானே வருவேன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நானே வருவேன் ஏன் பொன்னியின் செல்வனுடன் போட்டி, ஏன் ஆளவந்தானுடைய சாயல்... மனம் திறந்த செல்வராகவன்

தனுஷின் நானே வருவேன்
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு அதிக எதிர்பார்.ப்பு இருப்பது தெரிந்தும், தனுஷின் நானே வருவேன் திரைப்படம் ஒருநாள் முன்னதாக செப்டம்பர் 29ல் வெளியானது. செல்வன் ராகவன் இயக்கத்தில் தாணு தயாரித்துள்ள இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானரில் வித்தியாசமான மேக்கிங்கில் வெளியானது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும். நானே வருவேன் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வசூல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லாபம் பார்த்த நானே வருவேன்
நானே வருவேன் இந்தப் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பின்னர் சில திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நானே வருவேன் படம் 6 நாட்களில் இதுவரை 30 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இருப்பினும் நானே வருவேன் படம் பட்ஜெட்டை விட அதிகம் வசூலித்து லாபம் கொடுத்துள்ளதாம்.

மீண்டும் இணையும் கூட்டணி?
நானே வருவேன் படத்தின் மொத்த பட்ஜெட் 45 கோடி எனவும், ரிலீஸுக்கு முன்பே 57 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமம் ஆகிய வகையிலும் 25 கோடி ரூபாய் அளவில் பிசினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இது தயாரிப்பு நிறுவனத்துக்கு நல்ல லாபம் என்றும், விரைவில் இதேகூட்டணி மீண்டும் இன்னொரு படத்தில் இணையவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அது செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே டிராப்பான 'ராயன்' படமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சேகர் கம்முலாவுடன் அடுத்த படம்
நானே வருவேன் படம் வெளியானதை தொடர்ந்து தனுஷ் இப்போது வாத்தி, கேப்டன் மில்லர் படங்களில் பிசியாக இருக்கிறார். இதில், வாத்தி படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கேப்டன் மில்லர் படத்துக்கும் தனுஷ் மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதனால், விரைவில் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி உள்ளாராம். அதன்படி, தனுஷ் - சேகர் கம்முலா கூட்டணியில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.