காதல் கொண்டேன் சைக்கோ லுக்கில் வெறியாட்டம் ஆடும் தனுஷ்: வெளியானது நானே வருவேன் டீசர்

சென்னை: தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு நானே வருவேன் படத்தில் தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி இணைந்துள்ளது.

நம்பிக்கையோடு வரும் நானே வருவேன்

நம்பிக்கையோடு வரும் நானே வருவேன்

கோலிவுட்டின் நடிப்பு அசுரன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம், கடந்த மாதம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதே வெற்றி உற்சாகத்தில் அடுத்ததாக தனுஷின் 'நானே வருவேன்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இதனால், ரசிகர்களிடம் இந்தப் படத்திற்கு பயங்கரமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதிரி புதிரியாக வெளியானது நானே வருவேன் டீசர்

அதிரி புதிரியாக வெளியானது நானே வருவேன் டீசர்

'நானே வருவேன்' படத்தின் அப்டேட்களை படக்குழுவினர் ரொம்பவே ரகசியமாக பாதுகாத்து வந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வப்போது தனுஷின் போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டு வந்த படக்குழு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்திருந்தது. யுவனின் மரண மாஸ்ஸான இசையில் வெளியான 'வீரா சூரா' என்ற அந்தப் பாடல், தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது நானே வருவேன் டீசர் அதிரி புதிரியாக வெளியாகியுள்ளது.

சைக்கோவாக வெறியாட்டம் ஆடும் தனுஷ்

சைக்கோவாக வெறியாட்டம் ஆடும் தனுஷ்

தனுஷ் - செல்வராகவன் காம்போவில் வெறித்தனமாக உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களை கலங்கடித்து வருகிறது. காதல் கொண்டேன் படத்தில் வினோத் என்ற சைக்கோ கேரக்டரில் அசத்திய தனுஷ், அதேபோல் நானே வருவேன் படத்திலும் மிரட்டுவார் என டீசரில் தெரிகிறது. வசனங்கள் எதுவும் இல்லாமல் யுவனின் தெறிக்கும் பிஜிஎம்மோடு வெளியான 'நானே வருவேன்' டீசரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். டீசர் வெளியானது முதல் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

செப்டம்பரில் வெளியாகும் நானே வருவேன்

செப்டம்பரில் வெளியாகும் நானே வருவேன்

தனுஷ் ரசிகர்களுக்கு டீசர் மட்டும் போதாது என நினைத்து படக்குழு ரிலீஸ் பற்றியும் அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே நானே வருவேன் படம், செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நானே வருவேன் அதற்கு முன்பாக வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனாலும், இந்த மாதமே நானே வருவேன் வெளியாகவுள்ளதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். செல்வராகவன் சமீபத்தில் இயக்கிய படங்கள் ஹிட்டாகாத நிலையில், நானே வருவேன் அவருக்கு தரமான கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X