வாத்தி படத்தின் பாடல்கள் வெளியீடு... தனுஷ் - ஜிவி பிரகாஷ் காம்போ ஒர்க் அவுட் ஆனதா?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

 வாத்தி வரார்

வாத்தி வரார்

2023ல் தனுஷின் முதல் திரைப்படமாக வாத்தி வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. கடந்தாண்டு டிசம்பரில் வெளியாக வேண்டிய வாத்தி, சில காரணங்களால் இம்மாதம் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு தி கிரே மேன், அத்ரங்கி ரே, மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என மொத்தம் 5 படங்கள் நடித்திருந்தார் தனுஷ். இந்தாண்டும் வாத்தியை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆடியோ வெளியீடு

ஆடியோ வெளியீடு

தனுஷுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி நடித்துள்ள வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் என்ற டைட்டிலிலும் இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், மாறன் என முந்தைய படங்களில் மாஸ் காட்டிய தனுஷ் - ஜிவி பிரகாஷ் கூட்டணி, மீண்டும் வாத்தி படத்தில் இணைந்துள்ளது. அதனால் வாத்தி படத்தின் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

 5 பாடல்களும் ஐந்து ரகம்

5 பாடல்களும் ஐந்து ரகம்

ஏற்கனவே வா வாத்தி, நாடோடி மன்னன் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. தனுஷ் வரிகளில் ஸ்வேதா மேனன் பாடிய வா வாத்தி பாடல் மெலடியாக ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல், யுகபாரதி வரிகளில் ஆண்டனி தாசன் பாடி வெளியான நாடோடி மன்னன் பாடலும் கவனிக்க வைத்தது. இந்தப் பாடல்கள் தவிர கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பார்வைகளே ஆகிய பாடல்களும் வாத்தி படத்தில் இடபெற்றுள்ளன. மெலடி, சோகப் பாடல், குத்துப் பாடல் என 5 விதமான வெரைட்டியில் வாத்தி படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

 ரசிகர்களின் ரிசல்ட்

ரசிகர்களின் ரிசல்ட்

ஆனாலும் வாத்தி பட பாடல்களுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைத்ததாகத் தெரியவில்லை. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் படங்களின் பாடல்களில் இருந்த மாஸ் வாத்தியில் இல்லையென்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம் வாத்தி படத்தின் பாடல்கள் நன்றாக இருப்பதாகவும் தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக தனுஷ் படத்திற்கான எனர்ஜி வாத்தி பாடல்களில் இல்லையென்றே சொல்லப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வாங்கியிருந்தார். ஆனால் இப்போது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வாத்தி தியேட்டர் ரைட்ஸை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X