வெளியானது வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள்… தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ‘வா வாத்தி’
சென்னை: தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வாத்தி திரைப்படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் இசையில் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள்
தனுஷின் வாத்தி டிசம்பர் 2ம் தேதி ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன்பிறகு வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில், வாத்தி படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் எழுதியுள்ள 'வா வாத்தி' என்ற இந்தப் பாடல் மெலடியாக உருவாகியுள்ளது. மனதை வருடும் இந்த மெலடியான பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
எப்போதுமே முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்து வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகமாக இருக்கும். ஹீரோவின் இண்ட்ரோ சாங் அல்லது குத்து பாட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால், வாத்தி படத்தின் முதல் பாடல் மெலடியாக வெளியாகியுள்ளது, ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. தனுஷின் தாறுமாறான இண்ட்ரோ சாங் வரும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டனர். சென்ற வாரம் வெளியான வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரிலீஸ் தேதியில் மாற்றமா?
வாத்தி முதல் பாடல் கொடுத்த ஏமாற்றம் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் ரிலீஸ் தேதி குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. முக்கியமாக முதல் பாடலில் வாத்தி ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. கடந்த சில தினங்களாக வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என செய்திகள் வெளியாகின. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிளிலும் அதுகுறித்து எந்த அப்டேட்டும் இல்லாததால், இன்னும் அப்செட்டாகி விட்டனர் தனுஷ் ரசிகர்கள்.

புதிய ரிலீஸ் தேதி?
டிசம்பர் 2ம் தேதி வெளியாகவிருந்த வாத்தி அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பரில் அதிகமான படங்கள் வெளியாகவுள்ளதால், தியேட்டர்கள் கிடைக்காத நிலை ஏற்படும். அதனால் தான் வாத்தி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்தே தனுஷ் நடிக்கும் மற்ற படங்களின் அப்டேட் தெரியவரும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











