»   »  சவுந்தர்யா ரஜினி படத்தின் ஹீரோ தனுஷே, ஆனால் ஹீரோயின் தான்...

சவுந்தர்யா ரஜினி படத்தின் ஹீரோ தனுஷே, ஆனால் ஹீரோயின் தான்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஹீரோ தனுஷ் என்பது உறுதியாகிவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். முதலில் இந்த படத்தில் புது முகங்களை நடிக்க வைக்க நினைத்தார் சவுந்தர்யா.

Dhanush to start shooting for Soundarya's movie in November

பிறகு தனது அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷையே ஹீரோவாக்கியுள்ளார். தனுஷை ஹீரோவாக நடிக்க வைக்க சொன்னது வேறு யாரும் அல்ல ரஜினி தான்.

இந்நிலையில் சவுந்தர்யாவின் படத்தின் ஹீரோ தனுஷ் என்பது உறுதியாகியுள்ளது. தனுஷ் நவம்பர் மாத இறுதியில் சவுந்தர்யா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.

அதற்குள் தான் இயக்கி வரும் பவர் பாண்டி படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ். சவுந்தர்யா படத்தில் தனுஷுக்கு சோனம் கபூர் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் ஹீரோயின் இன்னும் தேர்வு செய்யப்படவில்லையாம்.

English summary
Dhanush is finalised for Soundarya Rajinikanth's upcoming movie Nilavukku Enmael Ennadi Kobam (NEEK). He will reportedly start shooting for the same from november end.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil