»   »  அம்மா கணக்கு... இது 2016-ல் தனுஷின் புதிய கணக்கு!

அம்மா கணக்கு... இது 2016-ல் தனுஷின் புதிய கணக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பக்கம் கமர்ஷியல் படங்கள், இன்னொரு பக்கம் விருதுக்கான படங்கள் என பக்காவாக பேலன்ஸ் பண்ணுகிறார் தனுஷ்.

சென்ற வருடம் காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ், இந்த வருடம் பெண் இயக்குநர் அஸ்வினி திவாரியின் படத்தைத் தயாரிக்கிறார். படத்துக்கு அம்மா கணக்கு என்று தலைப்பிட்டுள்ளனர்.


இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடிக்கும் இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.


Dhanush starts Amma Kanakku

அஸ்வினி, இதற்கு முன்பு Nil Battey Sannata என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்கு என்கிற பெயரில் உருவாகிறது.


தன்னந்தனியாக தன் மகளை வளர்க்கும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு. அம்மாவாக ரேவதியும் மகளாக அமலா பாலும் நடிக்கிறார்கள்.

English summary
Actor Dhanush has started his new production venture, Aswini Tiwari directed Amma Kanakku with a formal pooja today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil