»   »  தங்க செயின் போட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்!

தங்க செயின் போட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நெல்லையில் முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்

நெல்லை : நடிகர் தனுஷ் தற்போது 'மாரி 2' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நெல்லையில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

தனுஷ் ரசிகர்கள், தனுஷின் திடீர் வரவால் ஆச்சர்யத்தோடு வரவேற்றுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மாரி 2

மாரி 2

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு நெல்லை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சாய் பல்லவி நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் தனுஷ், கிருஷ்ணா, சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

முழுவீச்சில் ஷூட்டிங்

முழுவீச்சில் ஷூட்டிங்

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக பிரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தீவிரமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பை முடித்து விட்டு தான் இயக்கும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்த உள்ளார்.

சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்

சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்

இந்நிலையில் நடிகர் தனுஷ் நெல்லையில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தனுஷ் ரசிகர்கள் தனுஷின் திடீர் வரவால் பெரிதும் மகிழ்ந்துள்ளனர்.

தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

அங்கு சென்று தனுஷ் மணமக்களுக்கு தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். ரசிகரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸாக வந்து தங்க செயின் பரிசளித்த தனுஷின் இந்தச் செயலை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

English summary
Actor Dhanush is currently busy shooting for 'Maari 2'. In this case, actor Dhanush attends his fans wedding in Nellai. Dhanush went there and presented the golden chain to brides.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil