»   »  மஹாபிரபுன்னு கலாய்க்கிறாங்களே?: தனுஷ் என்ன சொல்கிறார்

மஹாபிரபுன்னு கலாய்க்கிறாங்களே?: தனுஷ் என்ன சொல்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை ஆளாளுக்கு கிண்டல் செய்வதை கண்டுகொள்வது இல்லை என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் முதன்முதலாக இயக்கியுள்ள ப. பாண்டி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் படத்திலேயே இயக்குனராக முத்திரை பதித்துவிட்டார். அந்த மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ்.

இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது,

சினிமா

சினிமா

17 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். விஐபி படத்தில் வந்த லூனா இரண்டாம் பாகத்தில் இருக்காது. இரண்டாம் பாகமும் விஐபி போன்றே வெற்றி பெறும்.

ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

ஹாலிவுட்

கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜின் படம் கைவிடப்படவில்லை. அக்டோபர் மாதம் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது. என் படங்கள் கிளாஸ் மற்றும் மாஸாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அனைத்து வகையான படங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

கலாய்

கலாய்

சமூக வலைதளங்களில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஆளாளுக்கு கிண்டல் செய்வது குறித்து தனுஷ் கூறும்போது, எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதை தான் நான் ப. பாண்டியிலும் கூற முயற்சித்துள்ளேன். நான் எப்பொழுதுமே நல்லதையே நினைக்க விரும்புகிறேன். இந்த மெச்சூரிட்டி என்னை அமைதியாக இருக்க வைத்துள்ளது என்றார்.

English summary
When asked about netizens criticising his personal life on social media, Dhanush said that he has work to do.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil