அற்புதமான ஆக்‌ஷன் அனுபவத்துக்கு காத்திருக்கிறேன்.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் தனுஷ்!

By

சென்னை: நெட்பிளிக்ஸின் தி கிரே மேன் படத்தில் நடிப்பதை அடுத்து ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ், நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் 'தி கிரே மேன்' என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மார்க் கிரேனியின் கிரே மேன் என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை

உருவாக்கப்பட்டுள்ளது.

ரூஸோ பிரதர்ஸ்

ரூஸோ பிரதர்ஸ்

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை கொண்ட இதில், தனுஷின் கேரக்டர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அவென்சர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இந்தப் படத்தை இயக்குகின்றனர்.

கிறிஸ் இவான்ஸ்

கிறிஸ் இவான்ஸ்

இந்தப் படத்தில் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷும் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இதை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

இதற்கு முன் 'தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்' என்ற ஆங்கில படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஆக்‌ஷன் அனுபவம்

ஆக்‌ஷன் அனுபவம்

ரியான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் நடிக்கும், ரூஸோ சகோதரர்கள் (அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா) இயக்கும் நெட்ஃபிளிக்ஸின் 'தி கிரே மேன்' குழுவோடு இணைகிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த அற்புதமான ஆக்‌ஷன் நிறைந்த அனுபவத்தில் இணைவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

அன்பைப் பரப்புங்கள்

அன்பைப் பரப்புங்கள்

உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கு நன்றி. அவர்களின் தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அன்பைப் பரப்புங்கள். ஓம் நம சிவாய, அன்புடன் தனுஷ்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X