Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விஜய்.. அஜித்தை.. ஓரமாக உட்கார வைத்த தனுஷ்.. இந்தியளவில் நம்பர் ஒன் பிரபல நடிகர் இவர் தான்!
சென்னை: 2022ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டின் பிரபல நடிகர்கள் பட்டியலை IMDB நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகர் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடத்தை பிடித்துள்ளது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இந்த ஆண்டு நடிகர் தனுஷின் புகழ் உச்சகட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
year ender 2022 : முறிந்தது தனுஷ் - ஐஸ்வர்யா 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை!

விஜய், அஜித் இல்லை
இந்த ஆண்டின் பிரபல நடிகர் பட்டியலில் நடிகர்கள் விஜய், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா நடிகர்கள் இடம்பெறவில்லை. மேலும், ஷாருக்கான், அமீர்கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. ஐஎம்டிபி வெளியிட்டுள்ள டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்டில் நடிகர் தனுஷ் முதலிடத்தை பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தனுஷ் முதலிடம்
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மாறன் திரைப்படம் ஓடவில்லை. ஆனால், தியேட்டரில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நானே வருவேன் படத்திலும் நடிப்பால் மிரட்டி இருந்தார் தனுஷ். பாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் அட்ரங்கி ரே திரைப்படம் வெளியானது. ஹாலிவுட்டில் தி கிரேமேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தனுஷ் இந்த ஆண்டு ஐஎம்டிபி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆலியா பட் 2வது இடம்
நடிகர் தனுஷை தொடர்ந்து ஆர்ஆர்ஆர், கங்குபாய் கத்தியவாடி, டார்லிங்ஸ், பிரம்மாஸ்த்ரா படங்களில் நடித்த நடிகை ஆலியா பட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூர் உடன் திருமணமான நிலையில், அழகான குழந்தைக்கும் இந்த ஆண்டு அம்மாவானார் ஆலியா பட் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் படத்திலும் ஆலியா பட் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் நடிகை
இந்த டாப் 10 பட்டியலில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் 3வது இடத்தை பிடித்துள்ளார். கான்ஸ் திரைப்பட விழாவிலும் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டாப் 10ல் யார் யார்
தனுஷ், ஆலியா பட், ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து 4வது இடத்தில் ஆர்ஆர்ஆர் பட நடிகர் ராம்சரண் உள்ளார். 5வது இடத்தில் நடிகை சமந்தாவும் 6வது இடத்தில் ஹ்ரித்திக் ரோஷன், 7வது இடத்தில் கியாரா அத்வானி, 8வது இடத்தில் ஜூனியர் என்டிஆர், 9வது இடத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் 10வது இடத்தில் கேஜிஎஃப் பட நடிகர் யஷ் உள்ளார்.

டிரெண்டிங்கில் தனுஷ்
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இந்த ஆண்டு ரவுண்டு கட்டி நடித்த நடிகர் தனுஷ் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்ததை அறிந்த தனுஷ் ரசிகர்கள் ஆர்மேக்ஸ் டாப் 10 எல்லாம் வேஸ்ட், ஐஎம்டிபி பட்டியல் தான் பெஸ்ட் என விஜய், அஜித் ரசிகர்களை சோஷியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
-
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
-
அய்யோ.. அட்லியா? வேண்டவே வேண்டாம்.. ஏகே 63 தகவலால் பதறிப்போன அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் மீம்ஸ்!