»   »  பாலிவுட்டில் கற்ற வித்தையை 'கொடி'க்காக மொத்தமாக இறக்கும் தனுஷ்

பாலிவுட்டில் கற்ற வித்தையை 'கொடி'க்காக மொத்தமாக இறக்கும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கொடி படத்தை விளம்பரப்படுத்த தனுஷ் த்ரிஷாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

3 படங்கள் ஓடாத வருத்தம் இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கொடி படத்தில் நடித்துள்ளார் தனுஷ். வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் கொடி.


கொடி படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.


கொடி

கொடி

கொடி படத்தில் அரசியலை கையில் எடுத்துள்ளார் தனுஷ். தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.


விளம்பரம்

விளம்பரம்

கொடி படத்தை சரியாக விளம்பரம் செய்து ஹிட்டாக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். இதனால் அவர் படத்தின் நாயகி த்ரிஷா மற்றும் பிறருடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து படத்தை விளம்பரம் செய்கிறார்.


பாலிவுட்

பாலிவுட்

தனுஷ் ராஞ்ஹனா, ஷமிதாப் என்ற இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் எல்லாம் படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர், நடிகைகள் ஊர், ஊராக சென்று அதை விளம்பரம் செய்வார்கள்.


தனுஷ்

தனுஷ்

பாலிவுட்டில் நடித்த போது அங்குள்ளவர்கள் படங்களை விளம்பரம் செய்வதை பார்த்த தனுஷ் தனது கொடி படத்திற்கு அந்த யுக்தியை கடைபிடிக்கிறார். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தனுஷ்.


கோவை, மதுரை

கோவை, மதுரை

தனுஷ், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சேலம், மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லையில் படத்தை விளம்பரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


English summary
Dhanush is going to tour Tamil Nadu to promote his upcoming movie Kodi that is going to hit screens on diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil