சிம்பு படத்துக்கு போட்டியாக வெளியாகிறதா தனுஷின் வாத்தி?: வெறித்தனமான அப்டேட், கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பம்' திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

Jailer Shooting ஆரம்பிச்சாச்சு, வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள் *Kollywood

இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார்.

'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு நிறவடையுள்ளதால், அதன் ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

குஷி மூடில் தனுஷ்

குஷி மூடில் தனுஷ்

அசுரன் வெற்றிக்குப் பின்னர் தனுஷின் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஜகமே தந்திரம், மாறன், இந்தியில் அத்ரங்கி ரே, ஹாலிவுட்டில் தி கிரேமேன் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. இந்நிலையில், சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனால் தனுஷ் ரொம்பவே உற்சாகத்தில் மிதந்து வருகிறார்.

வாத்தியாக வரவிருக்கும் தனுஷ்

வாத்தியாக வரவிருக்கும் தனுஷ்

'திருச்சிற்றம்பலம்' படத்தை முடித்த கையோடு, இப்போது வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். நானே வருவேன் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கி வருகிறார். அதேபோல், வாத்தி படத்தை, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

அசத்திய வாத்தி டீசர்

அசத்திய வாத்தி டீசர்

தமிழில் வாத்தி என்ற டைட்டிலுடனும், தெலுங்கில் சார் என்ற தலைப்பிலும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் வாத்தியாராக நடித்து வருவதையும் படக்குழு உறுதி செய்துள்ளது. தனுஷின் பிறந்தநாளில் வெளியான டீசரில், தனுஷ் வாத்தியார் கெட்டப்பில் மிரட்டியிருந்தார். மேலும், கல்விப் பின்னணியில் உள்ள அரசியலைப் பேசும் திரைப்படமாக 'வாத்தி' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாத்தி ரிலீஸ் அப்டேட்

வாத்தி ரிலீஸ் அப்டேட்

வாத்தி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால், படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, டிசம்பரில் வாத்தி படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. சிம்புவின் பத்து தல டிசம்பர் 14ம் தேதி வெளியாகிறது. இதனால் தற்போது தனுஷின் வாத்தி திரைப்படத்தை, டிசம்பர் 9ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ், சிம்பு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X