தனுஷோட வாத்தி படத்தின் சூட்டிங் மும்முரம்... படக்குழு வெளியிட்ட அப்டேட்ட பாக்கலாமா!

ஐதராபாத் : நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் வாத்தி. வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் சமூக வலைதளங்களில் வெளியாக வருவது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் ஜெகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், மாறன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீசானது. இந்நிலையில் தற்போது அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிப் படங்களாக உருவாகி வருகிறது.

சூட்டிங் விறுவிறு

சூட்டிங் விறுவிறு

படத்தில் அவருக்கு சம்யுக்தா மேனன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தை தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

தனுஷுடன் மீண்டும் கென் கருணாஸ்

தனுஷுடன் மீண்டும் கென் கருணாஸ்

படத்தில் சாய்குமார், தனிகெல்லா பரணி மற்றும் கென் கருணாஸ் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ்குமார் படத்தில் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போது கென் கருணாஸ் மற்றும் வெங்கி அட்லுரி இணைந்து எடுத்துள்ள சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

இந்தப் புகைப்படத்தில் வெங்கி அட்லுரி மற்றும் கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் மிகவும் இயல்பாக சிரித்தபடி காணப்படுகின்றனர். தனுஷ் இந்தப் புகைப்படத்தில் இல்லை என்றாலும் சூட்டிங்கின் இடைவேளையின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இயல்பாக மற்றும் சிறப்பாக காணப்படுகிறது.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்

தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அடுத்ததாக அவரது தி க்ரே மேன் ஹாலிவுட் படம் வரும் ஜூலையில் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் தனுஷ். தொடர்ந்து நெல்சனுடனும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் இணைந்த கென் கருணாஸ்

மீண்டும் இணைந்த கென் கருணாஸ்

முன்னதாக கென் கருணாஸ் தனுஷுடன் இணைந்து அசுரன் படத்தில் அவரது இளைய மகனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் வாத்தி படத்தில் அவர் தனுஷுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திலும் அவருக்கு முக்கியமான கேரக்டர் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X