»   »  கொடி படத்துக்காக த்ரிஷாவுடன் ஊர் ஊராகப் போகும் தனுஷ் அன்ட் கோ!

கொடி படத்துக்காக த்ரிஷாவுடன் ஊர் ஊராகப் போகும் தனுஷ் அன்ட் கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொடி " திரைப்படத்தை விளம்பரபடுத்த 25 , 26 ஆம் தேதியில் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர் தனுஷ் - த்ரிஷா மற்றும் படக்குழுவினர்.

கிராஸ் ரூட் பிலிம்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் வழங்கும் திரைப்படம் கொடி.


Dhanush to visit South districts for Kodi promotion

இப்படத்தில் நடிகர் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அரசியலை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக வெளிவரும் இப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் காணும் வகையில் சென்சார் குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.


வருகிற அக்டோபர் 25 , 26 ஆகிய தேதிகளில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு கொடி திரைப்படத்தை விளம்பரபடுத்த நாயகன் தனுஷ், நாயகி த்ரிஷா, பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா , நடிகர் காளி வெங்கட் ஆகியோர் செல்கின்றனர்.

English summary
Dhanush, Trisha and his Kodi team will visits the southern parts of the state for the promotions of Kodi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil