Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அது செம்ம Script... ஆனா அதுல அஜித்துக்கு பதிலா தனுஷ் தான்: ஹெச் வினோத் இப்படி பண்ணலாமா?
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 11ம் தேதி வெளியாகிறது.
அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், துணிவு படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் ஹெச் வினோத் பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
அதன்படி ஹெச் வினோத் அளித்த பேட்டியில் அஜித்துக்காக ரெடியான கதையில் தனுஷ் நடிக்கவுள்ளார் என கூறியது வைரலாகி வருகிறது.
மீண்டும் அஜித் படத்துக்கு வந்த சிக்கல்... கடைசி நேரத்துல இப்படியா?: என்னதான் நடக்குது?

அஜித் - ஹெச் வினோத் கூட்டணி
2019ல் வெளியான நேர்கொண்ட பார்வை படம் மூலம் உருவான அஜித் - ஹெச் வினோத் கூட்டணி, தொடர்ந்து வலிமை, துணிவு வரை பயணித்துள்ளது. வலிமை கடந்தாண்டு வெளியான நிலையில், தற்போது துணிவு திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. அஜித்துடன் மஞ்சு வாரியர் சமுத்திரகனி, பிரேம், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே துணிவு ப்ரோமோஷனுக்காக இயக்குநர் ஹெச் வினோத் தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

சதுரங்க வேட்டையில் அஜித்?
2014ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தான் ஹெச் வினோத் இயக்குநராக அறிமுகமானார். நட்டி லீடிங் ரோலில் நடித்திருந்த இந்தப் படம், ஹெச் வினோத்துக்கு தரமான இன்ட்ரோவாக அமைந்தது. கதை, திரைக்கதை, வசனம், மேக்கிங் என எல்லாவிதத்திலும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது இந்தப் படம். இந்நிலையில், துணிவு ப்ரோமோஷன் இண்டர்வியூவில் சதுரங்க வேட்டை படம் குறித்தும் அஜித்துக்கு அதில் இருக்கும் தொடர்பு குறித்தும் மனம் திறந்துள்ளார் ஹெச் வினோத்.

முதலில் அஜித் தான் சாய்ஸ்
அஜித்துடன் ஹெச் வினோத் முதலில் இணைந்தது நேர்கொண்ட பார்வை திரைப்படம். ஆனால், அஜித் சாரை முதலில் சந்திக்கும் போது அவரிடம் சொன்னது துணிவு படத்தின் கதை இல்லை. இது நேர்கொண்ட பார்வை படம் தொடங்குவதற்கு முன்பாகவே நடந்தது. சதுரங்க வேட்டை படத்தின் பிரம்மாண்டமான வெர்ஷனை தான் அஜித்திடம் முதலில் கூறியிருந்தேன். அது ஹீரோ சப்ஜெக்ட்டாக இல்லாமல் காமன்மேன் கதையாக எழுதிருந்தேன் எனக் கூறியுள்ளார்.

அஜித்துக்கு பதில் தனுஷ்
தொடர்ந்து பேசியுள்ள ஹெச் வினோத், தற்போது அந்த கதையில் தனுஷை நடிக்க வைக்கப் போறேன். தனுஷ் சாரிடம் கதை சொன்ன பிறகு அவர் ஓக்கே சொல்லிவிட்டால் அது படமாக வரும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனுஷ் - ஹெச் வினோத் கூட்டணி பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் தனுஷ் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.