தனுஷ் ஸ்கெட்ச்சில் சிக்கிய எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால்... எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?
சென்னை: கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக கலக்கி வரும் தனுஷ், 2017ல் பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா ஆகியோர் நடிப்பில் ரிலீஸான பவர் பாண்டி படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் திரைப்படம் இயக்கும் முயற்சியில் உள்ளார் நடிகர் தனுஷ்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநரான தனுஷ்
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் ஜானரில் பீரியட் திரைப்படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் மீண்டும் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017ம் ஆண்டு பவர் பாண்டி என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருந்தார் தனுஷ். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோருடன் படத்தை இயக்கிய தனுஷும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திந்தார். பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், ராஜ்கிரன் - ரேவதி இருவரின் காதலை பின்னணியாக வைத்து உருவாகியிருந்தது.

இரண்டாவது படம் இயக்க முடிவு
இந்நிலையில், தனது 2வது படத்தை இயக்க தனுஷ் ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாகவே இரண்டாவது படத்திற்கான கதையை எழுதி வந்த தனுஷ், தற்போது அதனை முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தனுஷ் இயக்கவுள்ள அவரது இரண்டாவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பவர் பாண்டி படம் போல இல்லாமல் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றியும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

முதன்முறையாக எஸ்ஜே சூர்யா
தனுஷ் இயக்கவுள்ள இந்தப் படத்தில் வில்லன் பாத்திரம் செம்ம வெரைட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால், அதில் எஸ்ஜே சூர்யாவை நடிக்க வைக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்படி எஸ்ஜே சூர்யாவுடன் தனுஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ள எஸ்ஜே சூர்யா, ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் ஜிகர்தண்டா 2 உட்பட மேலும் பல படங்களில் கமிட் ஆகியுள்ள எஸ்ஜே சூர்யா, தனுஷ் படத்திலும் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லால் சலாம் பட ஹீரோ
தனுஷ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இதில், விஷ்ணு விஷால் கேரக்டர் சூப்பராக இருக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படங்களில் நடிக்கவுள்ள விஷ்ணு விஷால் அவரது கேரியரில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். இந்நிலையில், தனுஷ் - எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











